மோசடி தொகையில் பரிசு வாங்கிய ஜாக்குலின் ஃபெர்னாண்டெஸின் ரூ.7.27 கோடி சொத்துகள் பறிமுதல்!

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சம்பாதித்த தொகையிலிருந்து ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு பரிசாக வழங்கிய ரூ. 7.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கிறது அமலாக்கத் துறை. இந்தியாவில் மோசடிகளின் மன்னனாக அறியப்படும் சுகேஷ் சந்திரசேகர் பலரை ஏமாற்றி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை குவித்திருந்தாலும், பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு என்னவோ நல்லவராக நடந்துகொண்டிருக்கிறார். தான் சட்டவிரோதமாக குவித்த சொத்துகளிலிருந்து விலையுயர்ந்த உடைகள், நகைகள், கார் என ஜாக்குலினுக்கு பரிசுகளை வாரி இறைத்திருக்கிறார் … Read more

என் மீது விழுந்த இமேஜ் மாறும் – சாமி

உயிர், சிந்து சமவெளி போன்ற சர்ச்சை படங்களை இயக்கியவர் சாமி. தற்போது ஈரானிய படமான சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தை தமிழில் அக்கா குருவி என்ற பெயரில் ரீ-மேக் செய்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். சாமி கூறுகையில், ‛‛இந்த படம் வந்த பிறகு என் மீது விழுந்த தவறான இமேஜ் மாறும். எப்போதும் சிறந்த கதைகளையே எடுக்க முன் வந்தேன். ஆனால் பெரும்பாலானவர்கள் சர்ச்சைக்குரிய படத்தை எடுக்கும் நிலையை உருவாக்கிவிட்டனர். 150 கதைகள் வைத்துள்ளேன். இனி வருடத்திற்கு 2, … Read more

நாளை விசேட போக்குவரத்து ஏற்பாடு

நாளை இடம்பெறும் சர்வதேச தொழிவாளர் தினத்தை முன்னிட் கொழும்பில்; விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இதேவேளை மாகாணங்களில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் தொடர்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

‘தெய்வ மகள்’ சீரியல் ரீமேக்: சன் டி.வி- விகடன் இடையே என்ன பிரச்னை?

Suntv Vs Vikatan Tv Update : தனது தயாரிப்பில் வெளியான சீரியலை அனுமதி இன்றி மற்ற மொழியில் ரீமேக் செய்த சன்டிவி நிறுவனம் மீது விகடன் டிவி நிறுவனம் 100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. சன்டிவியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தெய்வமகள். வாணி போஜன், ரேகா கிருஷ்ணப்பா, கிருஷ்ணா வென்னிற நிர்மலா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த சீரியல் வித்தியாசமான திரைக்கதையுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

ரயில்வே தேர்வு எழுதும் தமிழக தேர்வர்களுக்கு தமிழ்நட்டிலேயே தேர்வு மையங்களை அமைக்க சீமான் கோரிக்கை.!

ரயில்வே தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்வண்டித்துறை தேர்வினை எழுதத் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.  இது முழுக்க முழுக்க, இந்திய ஒன்றிய அரசின் பணிகளுக்கு தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்வாகி விடக்கூடாது என்ற திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும். … Read more

"நான் தென்னிந்தியப் படங்களைப் பார்த்ததில்லை. கமர்ஷியல் படங்களில் ஈடுபாடில்லை"- நவாசுதீன் சித்திக்

அண்மையில் வெளியான புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப்-2 போன்ற தென்னிந்தியப் படங்கள் இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. இது பாலிவுட் சினிமாவில் எந்த விதமானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இதற்கு பதிலளித்த பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக், “ஒரு படத்தின் தகுதிக்கு மேல் அதை பாராட்டுவதும், விமர்சனம் செய்வதும் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டது. நாளை வேறொரு படம் வெற்றி பெற்றால் அதைப் பாராட்டுவார்கள். இது வழக்கம்” என்று … Read more

ரூ.1.56 கோடி செலவில் கருணாநிதி சிலை: பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் பணிகள் தீவிரம்

சென்னை: சென்னையில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.56 கோடி செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்ளவுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த 26-ம் தேதி 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திருவாரூரில் முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என்பதை இம்மாமன்றத்தில் நெஞ்சில் விம்மக்கூடிய மகிழ்ச்சியால், இதயத்தில் துடிக்கக்கூடிய எழுச்சியால், சிந்தை … Read more

எரிபொருள் பௌசர் உரிமையாளர்களின் அனுமதியை ரத்துச் செய்யுமாறு அமைச்சர் உத்தரவு

தனியார் எரிபொருள் பௌசர் உரிமையாளர்களின் அனுமதியை ரத்துச் செய்யுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார். தனியார் எரிபொருள் பௌசர் இன்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் அமைச்சரின் உத்தரவு வெளியாகி உள்ளது. போராட்டத்தில் ஈடுபடவுள்ள தனியார் உரிமையாளர்களின் அனுமதியை ரத்து செய்து புதிய வழங்குனர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். ரயில்கள், அரசுக்கு சொந்தமான பௌசர்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சொந்தமான பௌசர்கள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தனியார் வாடகை பௌசர்கள் மூலம் சேவைகள் … Read more

போரில் உக்ரைன் வெற்றி பெற ஸ்பெயின் ராணி பரிசு!

ரஷ்ய படையெடுப்புக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து, ஸ்பெயின் நாட்டின் ராணி கையெறி குண்டுகளுடன் சேர்த்து தனது பரிசையும் அனுப்பிவைத்துள்ளார். ஸ்பெயின் ராணி Letizia Ortiz Rocasolano பாரம்பரிய தொத்திறைச்சிகளையும், உக்ரைன் ரஷ்யாவை வெற்றிபெற வாழ்த்தும் அஞ்சல் அட்டையையும் தனது நாட்டிலிருந்து ஒரு கையெறி குண்டுகளையும் அனுப்பினார். எண்ணிக்கையில் உயர்ந்த எதிரிக்கு எதிராக போரிடும் இராணுவத்தின் சக்திக்கு ஊக்கமளிக்கும் வகையில் உக்ரைனுக்கு இந்த பரிசு அனுப்பப்பட்டது. உக்ரைனுக்கு ஸ்பெயின் ராணி பரிசு வழங்கிய செய்தி … Read more

தமிழ்நாடு முழுவதும் நாளை (மே 1) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

சென்னை: மே1ந்தேதி தொழிலாளர்கள் தினத்தையொட்டி நாளை தமிழகம் முழுவதும்  டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு தமிழகஅரசு விடுமுறை அறிவித்து உள்ளது. தமிழக அரசுக்கு வருவாய் கொடுக்கும் நிறுவனங்களில் டாஸ்மாக் முதலிடத்தில் உள்ளது. பொதுவாக  விடுமுறை நாட்களில் மதுபானக்கடைகளில் கூட்டம் அலை மோதுவது வாடிக்கை. அதுவும் நாளை மாதத்தில் முதல்நாள் என்பதால் மாநிலம் முழுவதும்  பலகோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனையாகும். ஆனால், தமிழகஅரசு, பண்டிகை நாட்கள், தேசியத் தலைவர்கள் பிறந்த நாள் உள்ளிட்ட நாட்களில், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் … Read more