விசாரணைக் கைதி மரணம்- வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த இளையாங்கண்ணி தட்டறையை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது48). கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு, திருவண்ணாமலை சப் ஜெயிலில் அடைக்கப்பட்ட இவர் உயிரிழந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரை போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  விசாரணைக் கைதி தங்கமணி மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், … Read more

ராணுவ துணை தலைமை தளபதி நாளை பொறுப்பேற்பு

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான எம்.எம்.நரவனேவின் பதவிக் காலம் இன்று நிறைவடைகிறது. இதையடுத்து ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக இதற்கு முன்பு துணை தலைமை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நாளை பொறுப்பேற்ற உள்ளார். . இந்நிலையில், ராணுவத்தின் புதிய துணை தலைமைத் தளபதியாக பி.எஸ்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா். இவரும் நாளை பொறுப்பேற்கவுள்ளார்.  பி.எஸ் ராஜூ பீஜப்பூா் சைனிக் பள்ளியில் பயின்றவர். மேலும் தேசிய பாதுகாப்பு அகாடெமியில் பயிற்சி பெற்றவா். ஜேஏடி படைப் பிரிவில் … Read more

தரமற்ற கம்பி..மணல்..சிமெண்ட்!: பீகாரில் ரூ.1710 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன மேம்பாலம் லேசாக இடி இடித்ததற்கே இடிந்து விழுந்தது..!!

பகல்பூர்: பீகாரில் 1710 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன மேம்பாலம் லேசாக இடி இடித்ததற்கே இடிந்து விழுந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேம்பாலம் பீகாரின் கஹார்யா மற்றும் பகல்பூர் மாவட்டங்களை இணைக்கும் 4 வழிப்பாதை பாலமாகும். பகல்பூர் மாவட்டத்தில் உள்ள உத்தரவாகினி கங்கா ஆற்றங்கரையை இணைக்கும் இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு மழை பெய்தபோது பலமாக இடி இடித்தது. அப்போது … Read more

திருத்துறைப்பூண்டி: திருமணமான ஓராண்டுக்குள் பெண் எடுத்த விபரீத முடிவு-உறவினர்கள் போராட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தானந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி (20). இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தபோது வரம்பியம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் காயத்ரி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு … Read more

பலகோடி பட்ஜெட்டிலான பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுத்த யஷ் – ஏன்?

பலகோடி மதிப்பில் தயாராகவிருந்த பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க நடிகர் யஷ் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்கு கடந்த வாரம் நடிகர் அக்‌ஷய்குமார் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், மற்றொரு பிரபல நடிகரும் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார். பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த கே.ஜி.எஃப் – 2 திரைப்படத்தின் ஹீரோ யஷ், பலகோடி பட்ஜெட்டில் தயாராகவிருந்த பான் மசாலா மற்றும் ஏலக்காய் பிராண்ட் விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. … Read more

உலக நாடுகளில் முத்திரை பதிக்கும் புதிய இந்தியா: மோடி| Dinamalar

புது டில்லி: வெளிநாடு வாழ் சீக்கியர்கள் குழு, டில்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தது. அப்போது மோடி பேசியதாவது: இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னரும், பின்னரும் சீக்கிய சமூகத்தின் பங்களிப்புக்கு இந்த நாடே நன்றி சொல்ல கடமைபட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் பாரத மாதாவின் அடையாளங்கள். இந்தியாவின் குரலை எதிரொலிப்பவர்கள். இந்தியர்கள் கையில் எதுவுமின்றி உலகின் பல பாகங்களுக்குச் சென்று தங்கள் கடின உழைப்பால் முன்னேறி வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள். இது தான் புதிய இந்தியாவின் … Read more

மங்காத்தா 2 விரைவில் உருவாகும் : வெங்கட்பிரபு

மாநாடு படத்தை அடுத்து மன்மதலீலை என்ற படத்தை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து நாகசைதன்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். வெங்கட்பிரபு எங்கு சென்றாலும் அவரை துரத்தும் ஒரு கேள்வி மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம். இது குறித்து ஏற்கனவே தான் அளித்த பல பேட்டிகளில், மங்காத்தா இரண்டாம் பாகத்துக்கான கதையை அஜித்திடத்தில் கூறி விட்டதாகவும் அவரது அழைப்பு எப்போது வந்தாலும் உடனே அந்த படத்தை தொடங்குவேன் என்று கூறி இருந்தார் வெங்கட்பிரபு. இந்நிலையில் தற்போது ஒரு … Read more

சர்வதேச தொழிலாளர் தினம் நாளை

சர்வதேச தொழிலாளர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இலங்கையிலும் அரசியல் கட்சிகள் பேரணிகளையும், கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் நுகேகொட ரெயில் நிலையத்திற்கு அருகில் நாளை பிற்பகல் நடைபெறும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டம் அதன் தலைமையகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் காலிமுகத்திடலில் இடம்பெறும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் … Read more

இதேபோல ஒரு பிறந்தநாளில் அஜித் எடுத்த முக்கிய முடிவு… வைரல் ஆக்கும் ரசிகர்கள்!

Ajith 11 year old statement about fans club goes viral: நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாள் மே 1 தேதி கொண்டாடப்படும் நிலையில், அவர் தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்த அறிக்கை 11 ஆண்டுகளுக்குப் பிறகு வைரலாகி வருகிறது. தமிழின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் தனது 51 ஆவது பிறந்த நாளை மே 1 ஆம் தேதி கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க தயாராகி … Read more

உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபடுவோம்; போராடுவோம்; வெற்றி பெறுவோம் – Dr. அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி.!

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள தொழிலாளர் நாள் வாழ்த்துச் செய்தி : உழைக்கும் தொழிலாளர்களின் உரிமை பிரகடன நாளான மே நாளைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள பாட்டாளிகளுக்கு எனது உளமார்ந்த தொழிலாளர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் … Read more