ஷாங்காயில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்டித்து பாத்திரங்களை தட்டியும், கோஷமிட்டும் மக்கள் கண்டனம்

சீனா ஷாங்காய் நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்டித்து வீடுகளில் அடைக்கப்பட்டு இருக்கும் மக்கள் பாத்திரங்களை தட்டி தங்கள் எதிர்ப்பை வெளிகாட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஷாங்காய் கடந்த நாளில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கியதை அடுத்து பூட்டுதல்கள் கடுமையாக்கப்பட்டன. கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் வீடுகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி பாத்திரங்களை தட்டி கூச்சலிட்டனர். பீஜிங்கிலும் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, திருமணம், இறப்பு … Read more

மாநில மொழிகளைப் பயன்படுத்துவது நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டாக்கும் – பிரதமர் மோடி!

நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டை நாம் ஊக்குவிப்பது சாதாரண மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பொதுநல வழக்குகள் தன்னல நோக்குடன் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் மாநில முதலமைச்சர்கள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்தியச் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா … Read more

பிறக்கப்போகும் புது மாதம்! இந்த ராசிக்கார்கள் கோடீஸ்வரயோகத்தை பெறப்போகிறார்களாம்! நாளைய ராசிப்பலன்

2022 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதத்தில் நுழைய உள்ளோம். கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு மாதமும் பலன்கள் வேறுபடும் அந்த வகையில் மே மாதம் நாளை பிறக்கவுள்ள நிலையில் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையப்போகுது என பார்ப்போம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW                மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் … Read more

30/04/2022: தமிழ்நாட்டில் இன்று 49 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 49 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 36  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8.30  மணி அளவில் வெளியிட்டுள்ள  கொரோனா அறிவிப்பில், கடந்த 24மணி நேரத்தில், 18,403  சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட சோதனை 6,61,67,992 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக மேலும் 49  பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை … Read more

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.930 கோடியில் மாபெரும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திண்டுக்கல் மாவட்டத்திற்கு முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட பணிகளையும், தற்போது நடைபெற்று வரும் பணிகளையும் பட்டியலிட்டார். அவர் பேசியதாவது:- • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு இந்த ஓராண்டில் மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் மூலம் 121 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டிருக்கிறது.  • குடிநீர்த் தேவையினை … Read more

பொருளாதார இழப்பை சமாளிக்க 12 ஆண்டுகள் தேவைப்படும்- ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கையில் தகவல்

மும்பை: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் பரவ தொடங்கியது. இதனால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சமாளிக்க 12 ஆண்டுகள் தேவைப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு … Read more

சீனாவில் கட்டிட விபத்து – இடிபாடுகளில் சிக்கிய 20 பேரின் நிலை என்ன?

பீஜிங்: சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங் ஷா நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் 23 பேர் சிக்கியுள்ளனர். சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 39 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.  விபத்து பற்றி தகவலறிந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் கட்டிடத்தில் சிக்கியுள்ள மற்றும் காயமடைந்தவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கட்டிட … Read more

மக்களின் தேவையை உள்ளடக்கிய சட்டங்களை இயற்ற வேண்டும்! சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் நடந்த 39வது உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநாட்டில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘மக்களின் தேவையை உள்ளடக்கிய சட்டங்களை இயற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தினார். தலைநகர் டெல்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் 39வது தலைமை நீதிபதிகளின் மாநாடு இன்று நடைபெற்றது. 25 உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். இம்மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் முதல் நீதிமன்ற வளாகத்தில் காணப்படும் உள்கட்டமைப்பு பிரச்னைகள் வரையிலான கலந்துரையாடல்கள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டன. … Read more

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீ: 3 நாள் போராட்டத்திற்குப் பின் அணைப்பு

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 3 நாட்களாக எரிந்து வந்த தீ, தொடர் முயற்சியால் அணைக்கப்பட்டுள்ளது. பெருங்குடி குப்பைக் கிடங்கில் மறுசுழற்சி செய்யும் இடத்தில் புதன்கிழமை மாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. திறந்தவெளி என்பதாலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் தீ வேகமாகப் பரவியது. 15 ஏக்கரில் தீ பரவிய நிலையில், 100க்கும் மேற்பட்ட லாரிகளின் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, 12 தீயணைப்பு வாகனங்கள், 2 ஸ்கைலிப்ட் வாகனங்கள் மூலம் 90 … Read more