நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் அளித்த பரிசுப்பொருட்கள் எவை? அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரன், நடிகை ஜாக்குலின் பெர்னான்டசிற்கு தலா 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 பெர்ஷியன் பூனைகள், மினி கூப்பர் கார் உள்ளிட்டவற்றை பரிசளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சுகேஷ் மீதான 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஜாக்குலினின் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. முன்னதாக, ஜாக்குலினுக்கு சுகேஷ், பல விலை உயர்ந்த பொருட்களை பரிசளித்ததாக அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தனர். 52 லட்ச … Read more

இடது கையை மட்டும் வீசி வித்தியாசமாக நடக்கும் புடின்! நோய் தான் காரணமா?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வித்தியாசமாக நடப்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்வோம். ரஷ்ய ஜானாதிபதி விளாடிமிர் புடின் (69) நடப்பதை கவனித்துள்ளீர்களா..? அவர் நடக்கும்போது தனது வலது கையை பெரிதும் அசைக்காமல், இடது கையை மட்டும் வீசி வித்தியாசமாக நடப்பார். அவர் இப்படி நடப்பது குறித்து பலவிதமான கருத்துக்கள் உள்ளன. கேஜிபி பயிற்சி தகவல்களின்படி, புடினின் கால்கள் மற்றும் வலது கை விறைப்பாக இருக்கும் அதே சமயம் இடது கை பக்கவாட்டில் ஊசலாடும் புடினின் தனித்துவமான நடைபழக்கம், கேஜிபி … Read more

10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் பொதுத்தேர்வு கட்டாயம் என அறிவித்துள்ள தமிழகஅரசு,  இன்று பொதுத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி 10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு வருகிற மே 5ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 10ஆம் வகுப்புகளுக்கு மே 6ஆம் தேதியிலும், 11ஆம் வகுப்புகளுக்கு மே 10ஆம் தேதியும் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், பள்ளி … Read more

திடீர் திருப்பம்… சி.எஸ்.கே. கேப்டன் பொறுப்பை மீண்டும் டோனியிடம் ஒப்படைக்கிறார் ஜடேஜா

சென்னை: ஐ.பி.எல். சீசனில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வேறு எந்த அணியும் சாதிக்காத வகையில்  9 முறை இறுதி போட்டிக்கு நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதில் 4 தடவை (2010, 2011, 2018, 2021) கோப்பையை வென்றுள்ளது.  5 தடவை 2-வது இடத்தை பிடித்தது.  இவ்வாறு சென்னை அணியின் சிறப்பான செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாக  விளங்கிய கேப்டன் டோனி இந்த சீசனில் இல்லை. போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன் … Read more

60 சதவீத சிறார்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர். இதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி முழு அளவில் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் … Read more

கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள 13 ஆண்டுகள் வரை ஆகலாம்: ரிசர்வ் வங்கி கணிப்பு

மும்பை: கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தில் இருந்து இந்தியா மீள்வதற்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக நம் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால் திடீரென்று ஓரிரு வாரங்களாக கொரோனா அதிகரித்துள்ளது. தற்போது, தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இந்த வாரத்தில் மூன்றாவது முறையாக 3 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் … Read more

எளியோரின் வலிமைக் கதைகள் 28: “யாருக்கோ உணவு கொடுக்கிறோம்னு சந்தோஷம் இருக்கும்”

உணவு தேவை என்பது தவிர்க்கமுடியாத ஒன்று வாழ்க்கைக்கு. குறிப்பாக கோடைக்காலங்களில் உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. குளிர்காலங்களில் உண்ணும் உணவிற்கும் கோடைகாலங்களில் உண்ணக்கூடிய உணவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கடும் வெயிலின் தாக்கத்தால் நீர் ஆகாரங்களையே நாம் அதிக அளவு உட்கொள்கிறோம். அந்த வகையில் சிறுதானிய உணவாகவும், இயற்கை உணவாகவும் நம்முடைய உடலை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உணவுகளில் ஒன்றாக கூழ் இருக்கிறது. அதிகமாக கிராமப்புறங்களில் மட்டுமே கூழ் விற்கப்பட்டு வந்தநிலையில் இப்போது நகரங்களிலும் கூழ்க்கடைகள் அதிகரித்து … Read more

திருடிய பாதுகாவலரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு அடித்து உதைத்த கொடூரம் – வைரல் வீடியோ

சட்டீஸ்கரில் திருடிய பாதுகாவலரை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக அடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள சிபாட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதுகாவலராக பணிபுரிந்து வரும் மகாவீர் என்ற நபரை நான்கு பேர் கட்டைகள் மற்றும் குச்சிகளால் அடித்து தாக்குவதையும், தன்னை விட்டுவிடுமாறு அவர் கெஞ்சுவதையும் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலானதையடுத்து போலீசார் 4 பேரை கைதுசெய்துள்ளனர். சிபாட் நகரின் காவல்நிலைய அதிகாரி விகாஷ் குமார் … Read more

டிவியில் மே தின சிறப்பு திரைப்படங்கள்

மே தினம் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வந்தாலும் வழக்கம்போல மே தின சிறப்பு திரைப்படங்களை சேனல்கள் ஒளிபரப்புகிறது. ஜீ தமிழ் சேனல் அஜித், ஹீமா குரேஷி நடித்த வலிமை படத்தை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்புகிறது. அஜித் படத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக முன்னணி தொலைக்காட்சி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்புகிறது. இதுதவிர காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், ஒரு மணிக்கு அஜித் நடித்த வீரம், 4 மணிக்கு கார்த்தி … Read more

விஸ்வரூபம் எடுக்கும் யெஸ் வங்கி DHFL கடன் மோசடி.. சிபிஐ அதிரடி சோதனை..! முழு விபரம்

இந்திய வங்கிகளில் தொடர்ந்து கடன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது யெஸ் வங்கி DHFL கடன் மோசடி வழக்கு மிகப்பெரியதாக வெடித்துள்ளது. யெஸ் வங்கி DHFL கடன் மோசடி வழக்கு தொடர்பாக அஷ்வினி போன்சலே, ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா உள்ளிட்ட பல முக்கியத் தொழிலதிபர்களுக்குச் சொந்தமாக மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனே மாவட்டங்களில் உள்ள வீடுகளில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சனிக்கிழமை சோதனை நடத்தியது. ரூ.52 லட்சம் கோடி இழப்பு.. 2035 … Read more