கேரளாவில் அஜித் – வைரலாகும் அவரின் நன்றி கடிதம் மற்றும் புகைப்படங்கள்… பின்னணி என்ன?

நடிகர் அஜித்குமார் கேரளாவில் உள்ள குருகிருபா பராம்பரிய வைத்திய மையத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார். அவரது சிகிச்சை நிறைவடைந்த நிலையில் தனக்குக் கனிவான உபசரிப்பு வழங்கிய நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தன் கைப்பட நன்றி கடிதம் ஒன்றை எழுதி அதை வழங்கிவிட்டு வந்திருக்கிறார். அஜித்தின் கடிதம் அவருக்கு சிகிச்சை அளித்த உன்னிகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவரையும் அதில் குறிப்பிட்டு, “இருவருக்கும் Gurukripa குழுவினருக்கும், உங்களின் அன்பு, ஆதரவு, கனிவு மற்றும் உபசரணைக்கு நன்றி. அழகான வாழ்க்கை … Read more

உக்ரைனை எச்சரிக்கும் பிரித்தானியா… உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ நாடுகளுக்குள் மாறுபட்ட கருத்து

உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ நாடுகளுக்குள்ளேயே மாறுபட்ட கருத்து உருவாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz ஆகியோர், எப்படியாவது ஒரு அமைதி ஒப்பந்தம் உருவாகிவிடவேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். அவர்கள் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை பல விடயங்களை விட்டுக்கொடுத்தாவது சீக்கிரத்தில் ஒரு அமைதி ஒப்பந்தத்தை எட்ட நிர்ப்பந்திக்கலாம். அதனால், இவ்வளவு அராஜகமாக உக்ரைனுக்குள் ஊடுருவி, குழந்தைகள், பெண்கள் என்று கூட பார்க்காமல் பொதுமக்களைக் கொன்று … Read more

மது அருந்துபவர்கள் மகா பாவிகள்! பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

பாட்னா: மது அருந்துபவர்கள் மகா பாவிகள், மகாத்மா காந்தி சொன்னதை கேட்காதவன் மகா பாவி அவர்கள் இந்தியர்களே அல்ல,  பீகார் முதல்வர் நிதிஷ் குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம்,  அமல்படுத்தப்பட்டது. இருந்தாலும் அங்கு மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது. திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதும், அதை குடிக்கும் பலர் கைது செய்யப்படு வதும் வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவையில்  நேற்றுமதுவிலக்கு மற்றும் … Read more

ஜவுளி தொழிலை மேம்படுத்த பஞ்சு விலையை குறைக்க வேண்டும்- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த 60 நாட்களில் மட்டும் பஞ்சு விலை கேண்டி ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில் பஞ்சாலைத் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கித்தவிப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தமிழ் நாட்டில் உள்ள ஆலைகள் பல்வேறு வழிகளில் நூல் உற்பத்தியினை குறைத்துள்ளதாகவும், நூற் பாலைகள் உற்பத்தியை குறைத்தது காரணமாக தொழிலாளர்கள் … Read more

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

புதுடெல்லி: பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பயமில்லாமல் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.  இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.  கொரோனா காலகட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டனர். எனவே, மாணவர்கள் பயமோ, தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாமல் … Read more

திருப்பூரில் அனைத்து ரக நூல்களின் விலையும் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்வு

திருப்பூர்: திருப்பூரில் அனைத்து வகை நூல் ரகங்களுக்கான விலையில் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.335-ல் இருந்து ரூ.365- ஆக உயர்ந்துள்ளது. 

தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது தொடர்பாக 5-வது ஆண்டாக பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது தொடர்பாக 5-வது ஆண்டாக பிரதமர் மோடி மாணவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றுள்ளனர்.

"அரசியல் விருப்பு வெறுப்பை ஆளுநர் செலுத்தக்கூடாது" முரசொலி காட்டமான விமர்சனம்

நீட் விலக்கு சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதில் ஆளுநர் இனியும் தாமதம் செய்வது அவர் வகிக்கும் பதவிக்கும், அவருக்கும் பெருமை சேர்க்காது என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது. நீட் விலக்கு சட்டமுன்வடிவை அனுப்பி வைப்பதில், ஆளுநர் காட்டும் தாமதம் துளியும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என முரசொலி நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக, தற்கொலை செய்து கொண்டவர்களை மனதில் வைத்து ஆளுநர் விரைந்து முடிவெடுத்தாக வேண்டும் … Read more

நாடு முழுதும் மேலும் 1,918 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,918 பேர் கோவிட் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,25,775 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,918 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,90,922 ஆனது. தற்போது 13,672 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக … Read more

தவறான தகவல்களை தருவதா: விக்கிபீடியாவை எச்சரிக்கும் ரஷ்யா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்பான தகவல்களுக்கு 4 மில்லியன் ரூபிள்(ரஷ்ய பணமதிப்பு) அபராதம் விதிக்கப்படும் என, தகவல் களஞ்சியமாக விளங்கும் ‘விக்கிபீடியா’ இணையதளத்திற்கு ரஷ்யா தொலைதொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்யாவிற்கு எதிராக இணையதளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்தவர்களை குறிவைத்து, உக்ரைன் மீதான ராணுவ … Read more