230 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. அமெரிக்க சந்தை சரிவு..!

2022-23ஆம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று வங்கி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகளின் சரிவின் காரணமாக மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை துவங்கினாலும், 250 புள்ளிகள் வரையில் உயர துவங்கியுள்ளது. இந்த உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் ரஷ்யா – உக்ரைன் நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில் முதலீட்டுச் சந்தையில் நிலைமை மாறியுள்ளது, இதேபோல் கச்சா எண்ணெய் முதல் உணவுப் பொருட்களின் விநியோகம் சீராகியுள்ளது. காலாண்டு முடிவுகள் காரணமாக அமெரிக்கச் சந்தை நேற்று சரிவுடன் … Read more

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்படும் 

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் நேற்று (31) நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.   வேகமாக அதிகரித்து வருகின்ற  கடலட்டைப் பண்ணைகளுக்குத் தேவையான கடலட்டை குஞ்சுகளை பெற்றுக் கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் தற்போயை நிலவரங்களையும், நாட்டிற்கு தேவையான அவசர ஏற்றுமதி வருமானங்களையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாக  கடலில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு … Read more

ட்ரீம், ஹேர் மாஸ்க், சீரம், கண்டீஷனர்.. சேதமடைந்த முடியை கவனித்துக்கொள்ள் சிம்பிள் டிப்ஸ் இங்கே!

அதிகப்படியான சூரிய ஒளி மற்றும் இரசாயன சிகிச்சைகள் முதல் கவனக்குறைவு வரை – பல காரணங்களால் நம் தலைமுடி மந்தமாகவும், சேதமடைந்ததாகவும், உடையக்கூடியதாகவும் இருக்கும். சேதமடைந்த கூந்தல் உங்கள் ஒட்டுமொத்த தோற்றத்தைத் தணித்து, அந்த ரம்மியமான ஆரோக்கியமான அழகுக்கு ஏங்க வைக்கும். உங்களுக்கு மந்தமான மற்றும் உடையக்கூடிய முடி பிரச்சனை இருந்தால், நீங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. தோல் மருத்துவர் ஆஞ்சல் பந்த், சமீபத்தில், வீட்டிலேயே சேதமடைந்த முடியை நிர்வகிக்க சில எளிய குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். “லேசான … Read more

உச்சம் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 272 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4800 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38400-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

“தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்” – அண்ணாமலைக்கு எதிராக இடதுசாரிகள் வரிந்துகட்டுவதன் பின்னணி

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை, தி.மு.க தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில், இடதுசாரித் தலைவர்களும் பா.ஜ.க-வுக்கு எதிராகவும் அண்ணாமலைக்கு எதிராகவும் களமிறங்கியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் மார்ச் 30-ம் தேதி தொடங்கியது. கே.பாலகிருஷ்ணன் அந்த மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான கே.பாலகிருஷ்ணன், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை ஒன்றை விடுகிறேன். தமிழகத்தில் மதப் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால், உங்களை தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்” என்றார். … Read more

மதுராந்தகத்தில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பல்வேறு வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 இளைஞர்களை கைது செய்த போலீசார் ஒருவருக்கு மாவு கட்டு போட்டு விட்டுள்ளனர். கீழவளம் பகுதியில் உள்ள அரசு மதுக்கடையில் கடந்த 19-ஆம் தேதி இரவு ஊழியர்களை மிரட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கும்பலை, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இந்நிலையில், கத்தி காட்டி மிரட்டி அந்த காவலர்களை தாக்கிவிட்டு கும்பல் தப்பிச் சென்றது. இதுதொடர்பாக 2 தனிப்படை … Read more

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ அனுமதி கோரினார்

சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும், நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டிட திறப்பு விழா ஏப்.2-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் … Read more

மாநிலங்களவையில் காலியாகும் 13 இடங்களுக்கான தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி தலா 5 இடங்களில் வெற்றி

புதுடெல்லி: மாநிலங்களவையில் விரைவில் காலியாக உள்ள 13 இடங்களுக்கான தேர்தலில், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த தலா 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கேரளாவில் இடது முன்னணிக்கு 2 இடமும் காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடமும் கிடைத்துள்ளது. பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, கேரளா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் விரைவில் காலியாக உள்ள 13 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாபிலிருந்து ஆம் ஆத்மி கட்சியின் 5 பேர், நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பாஜகவைச் சேர்ந்த … Read more

இலங்கையில் பதற்றம்: அதிபர் மாளிகை முற்றுகை: கடும் வன்முறை; கொழும்பு நகரில் ஊரடங்கு 

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு … Read more

சிம்புவின் செயலால் அஸ்வின் – லாஸ்லியாக்கு அடித்த ஜாக்பாட்…! அடுத்த படத்திற்கு கமிட்டாமே…?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் அஸ்வின். ஒருசில ஷார்ட் பிலிம்கள், சீரியல்களில் அஸ்வின் நடித்து இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கி தந்தது. இதன் பின்பு பட வாய்ப்புகள் அஸ்வினுக்கு குவிய தொடங்கியது. அதன் மூலம் தான் ’என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தில் நடித்தார்.இந்த படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் தான் 40 கதை கேட்டேன் … Read more