அமெரிக்காவில் 3 மாகாணங்களை அடுத்தடுத்து தாக்கிய சூறாவளிகள்

அமெரிக்காவில் அலபாமா, லூசியானா மற்றும் மிசிசிபி ஆகிய மாகாணங்களை சூறாவளி மற்றும் கடும் புயல்கள் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த மாகாணங்களில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. மத்திய அலபாமா பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்து 3 சூறாவளிகள் தாக்கியதில் மரங்கள் வேரொடு பெயர்ந்து விழுந்தன. கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. சூறாவளி காற்றில் சிக்கிய நடமாடும் வீடு ஒன்று அப்படியே தலைகீழாக நர்த்தனம் ஆடியது. பலத்த காற்று மற்றும் மழை … Read more

பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வராதீர்… தெலுங்கானாவில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் எச்சரிக்கை

தெலுங்கானா மாநிலத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் தெலங்கானாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். Source link

துரோகிகள்… தண்டனை உறுதி: உக்ரைன் அதிகாரிகள் மீது கொந்தளித்த ஜெலென்ஸ்கி

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் முதன்முறையாக முக்கிய அதிகாரிகள் இருவரின் பதவிகளை பறித்துள்ளார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று மூத்த அதிகாரிகள் இருவரை துரோகிகள் என்று குற்றம் சாட்டி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார். மட்டுமின்றி, சுய ஆதாயத்திற்காக நாட்டை விட்டுக்கொடுக்கும் எவரும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார். ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், உக்ரேனிய அதிகாரிகளிடையே நாடு தொடர்பில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது அரிய விடயமாக பார்க்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு சேவையில் பணியாற்றி … Read more

அரசு விரைவு பேருந்தில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி! தமிழகஅரசு

சென்னை: தொலைதூரம் பயணம் செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில், வெளிமாவட்ட பயணங்களுக்கு இருக்கை வசதி, படுக்கை வசதி மற்றும் குளர்சாதன வசதிகளுடன் கூடிய டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில்  படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளில் பெண்களுக்கு தனிப் படுக்கை வசதி ஒதுக்கி தமிழகஅரசு போக்குவரத்து … Read more

இந்தியாவில் அதிகாரமிக்க தலைவர்களில் பிரதமர் மோடிக்கு முதலிடம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மற்றும் 3 புதிய வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்தியாவின் அதிகாரமிக்க 100 தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் பட்டியலை ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடி முதல் இடத்தில் உள்ளார். சமீபத்தில் 5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் மாதம் 2-ந்தேதி ஸ்ரீ சுபக்ருத் நாம வருடாந்திர உகாதி, உகாதி ஆஸ்தானம், 3-ந்தேதி மத்ஸ்ய ஜெயந்தி, 10-ந் தேதி ஸ்ரீராமநவமி ஆஸ்தானம், 12-ந்தேதி சர்வ ஏகாதசி, 14-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை வசந்த உற்சவம், 26-ந் தேதி ஸ்ரீ பாஷாய கார்லா உற்சவ ஆரம்பம், 29-ந் தேதி மாத சிவராத்திரி, 30-ந் தேதி சர்வ அமாவாசை ஆகிய … Read more

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகையிட்ட விவகாரம் – பெண் உள்பட 45 பேர் கைது

கொழும்பு : இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கும் நிலை உருவாகி உள்ளது.  மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின் விநியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொழும்பு நகரில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு காணப்படுகிறது.    இதற்கிடையே, பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட … Read more

பஞ்சு விலையை குறைத்து ஜவுளித் தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை தேவை: ஓ.பி.எஸ்.

சென்னை: பஞ்சு விலையை குறைத்து ஜவுளித் தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை தேவை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜவுளித்தொழிலை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது!!

ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அதிகாலை நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். ஜம்மு- காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் காஷ்மீர் போலீசாரும் நள்ளிரவில் அங்கு விரைந்தனர். தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக வீரர்கள் நடத்திய தாக்குதலில் 1 … Read more

இரண்டு மடங்கு கட்டணம் கேட்பதா? கோபத்தில் டோல்கேட் ஊழியரை தாக்கிய பெண்

செங்கல்பட்டு பரணுர் டோல்கேட்டில் அதிக கட்டணம் கேட்டதாக ஊழியரை பெண் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. நேற்று முதல் தமிழகத்தில் உள்ள 24 டோல்கேட்களிலும் நுழைவுக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடிக்கு நேற்று நள்ளிரவு காரில் வந்த பெண், பாஸ்ட்ராக் மூலம் பணம் செலுத்த முயன்றபோது அதில், பேலன்ஸ் குறைவாக இருந்துள்ளது. இதையடுத்து போதிய பணம் இல்லாததால் 110 ரூபாய் கட்டணம் செலுத்தி விட்டு காரை எடுத்துச் சொல்லுங்கள் என ஊழியர் கூறியுள்ளார். இந்நிலையில், … Read more