மகாராஷ்டிரா: சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் பற்றிய நெருப்பு
மகாராஷ்டிராவில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் அச்சம் நிலவியது. நாக்பூரில் கிட்டிகதான் என்ற இடத்தின் அருகே நகரப்பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன்பகுதியில் திடீரென புகை வந்துள்ளது. இதைப் பார்த்து சந்தேகமுற்ற ஓட்டுநர், பேருந்தை நிறுத்தி பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டுள்ளார். பயணிகள் இறங்கிவிட்ட பின் புகை வந்த இடத்தை ஆய்வுசெய்ய நினைத்தபோது, திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. பேருந்து முழுவதும் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் … Read more