வெளியானது ஜி.வி பிரகாஷின் காதலிக்க யாருமில்லை படத்தின் அப்டேட்…!

ஜி.வி.பிரகாஷின் ‘காதலிக்க யாருமில்லை’ படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காதலிக்க யாருமில்லை’. இந்த படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம் ரைசா வில்சன் நடித்துள்ளார்.இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பது இயக்கி வருகிறார். நெட்டிசன் கேட்ட ‘ஒத்த’ கேள்வி: யாஷிகாவின் பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்…! இந்த படத்தில் குரு சோமசுந்தரம், யோகிபாபு, … Read more

மீரிஹான போராட்ட பதற்றம் தணியும் முன்னர் மற்றும் ஒரு முக்கிய பொருளின் விலை அதிகரிப்பு!

நாட்டில் பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சீமெந்தின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.  அதன்படி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.  சீமெந்து விற்பனை முகவர்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source link

இலங்கை அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. அதிபர் இல்லம் முன் போலீசார், ராணுவ வீரர்கள் குவிப்பு

இலங்கையில் அதிபர் மாளிகை முன் பொது மக்கள் கலவர போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தலைநகர் கொழும்புவின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டன. பொருளாதார நெருக்கடியை கண்டித்து மிரிஹானவில் உள்ள அதிபர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். காவல் வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்திய மக்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் மீது கற்களை வீசி கலவர போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் பொது மக்களை, ராணுவ … Read more

இந்தியாவில் புதிதாக 1,335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து ஆயிரத்து 335 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 52 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 918 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் 13 ஆயிரத்து 672 பேர்  சிகிச்சையில் இருந்து வருகின்றனர். Source link

ரஷ்யாவால் ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்த பேரிடி… விளாடிமிர் புடின் எடுத்த ஒற்றை முடிவு

உக்ரைன் மீதான போருக்கு பின்னர், ரஷ்ய நாணயத்தில் மட்டுமே இனி ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்ற விளாடிமிர் புடினின் முடிவு அமுலுக்கு வந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரித்தானியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், முதன்மையான நாடுகளால் பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, தமக்கு எதிரான, தம்மால் ஆதாயம் பெறும் நாடுகளுக்கு பேரிடியாக புதிய கொள்கையை … Read more

போலீசாரை மிரட்டிய திமுக கவுன்சிலர் கணவர் சஸ்பெண்டு! கைது செய்யப்படுவாரா?

சென்னை: போலீசாரை கேவலமாக திட்டி மிரட்டிய திமுக கவுன்சிலர் கணவர் கட்சியில் இருந்த சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது. இவர் எப்போது  கைது செய்யப்படுவார், காவல்துறை திமுகவினரை கைது செய்யாதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 51 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்ஞனா, இவரது கணவர் ஜெகதீசன். இவர் சென்னை வடக்கு மாவட்டத்தின் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் … Read more

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி- போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: * அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி செய்து கொடுக்கப்படும். * பெண்களுக்கு 1LB மற்றும் 4LB ஆகிய இருக்கைகளை ஒதுக்கீடு செய்து தரப்படும். * குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா பேருந்துகளில் 1UB மற்றும் 4UB இருக்கைகளை ஒதுக்க வேண்டும். * பேருந்து புறப்படும் வரை பெண்கள் முன்பதிவு செய்யாதபட்சத்தில் பொது படுக்கையாக கருதி மற்றவர்களுக்கு ஒதுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. … Read more

மாணவிகளுடன் சேர்ந்து நடனமாடிய பெண் கலெக்டர்- சமூக வலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கலைவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கலை விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சியை பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் திவ்யா எஸ் ஐயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நேற்று மாணவ- மாணவிகளின் இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி விழா அரங்கில் பல்வேறு குழுக்களை சேர்ந்த மாணவிகள் … Read more

சீன கோர்ட்டில் கதவுகளை மூடிக்கொண்டு ஆஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் மீது விசாரணை

பீஜிங் : சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் கடந்த 2020-ம் ஆண்டு சீன போலீசாரால் கைது செய்யப்படுகிற வரையில், அங்கு சீன அரசு ஊடகமான ‘சி.ஜி.டி.என்’னில் பணியாற்றி வந்தார். இவர் தனது பணிக்காலத்தில் நாட்டின் ரகசியங்களை சட்ட விரோதமாக வினியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது கைது நடவடிக்கையில், நீதியின் அடிப்படை தர நிலைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்துகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவரது குடும்பத்தினர், அவர் ஏதுமறியாதவர் என … Read more

திருச்சி அருகே 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

திருச்சி: திருச்சி பாலக்கரை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த தர்மலிங்கம் என்பவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.