ஆந்திராவில் உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக கூறி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 8 பேருக்கு 2 வாரம் சிறை..!!

ஆந்திரா: ஆந்திராவில் உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக கூறி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 8 பேருக்கு 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு பள்ளிகளில் இயங்கும் கிராமம் மற்றும் வார்டு செயலகங்களை அகற்ற கடந்த 2020ம் ஆண்டு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை ஓராண்டாக மதிக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், அதனை செயல்படுத்ததாக 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு 2  வாரம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான விஜய்குமார், … Read more

ஈரோடு டூ கோவை: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில்

ஈரோட்டில் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பாசஞ்சர் ரயில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது போக்குவரத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதை அடுத்து ஈரோடு சந்திப்பில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பாசஞ்சர் ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பாசஞ்சர் ரயில் இயக்கம் குறித்து பரிசீலிக்கப்படவில்லை இதனால் ஈரோட்டில் இருந்து திருப்பூர் மற்றும் கோவை … Read more

ஏப்ரல் – செப்., வரை ரூ.8.45 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு முடிவு!

புதுடில்லி: 2022 – 23 நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.8.45 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ரூ.8.45 லட்சம் கோடி தொகையானது 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முழு ஆண்டுக்கான ரூ.14.95 லட்சம் கோடி கடன் திட்டத்தில் 56.5 சதவீதமாக உள்ளது. சந்தையில் நடைபெறும் வாரந்திர பத்திர ஏலங்கள் மூலம் 2023 நிதியாண்டின் முதல் பாதியில் அரசு கடன் … Read more

பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்க பிரதிநிதிகள் சிலர் இலங்கை பாராளுமன்றம் விஜயம்

பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவரும் பிரான்ஸ் பாராளுமன்ற செனட் உறுப்பினருமான ஜொஎல் கெரியோ (Joel Guerriau) உள்ளிட்ட பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்க பிரதிநிதிகள் சிலர் இலங்கை பாராளுமன்றத்துக்கு அண்மையில் விஜயம் செய்தனர். நட்புறவுச்சங்கத்தின் பிரதித் தலைவி செனட் உறுப்பினர் அனிக் ஜக்மன்ட் (Annik Jacquemet), சங்கத்தின் உறுப்பினர் அலன் ஹூபர்  (Alain Houpert) மற்றும் சங்கத்தின் நிறைவேற்று செயலாளர் திருமதி. ஏன் லோரா (Anne Laure) உள்ளிட்டோர் இதன்போது கலந்துகொண்டனர்.   பிரதிநிதிகள் … Read more

Tamil News Today LIVE: அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி.. போக்குவரத்துத் துறை உத்தரவு!

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107. 45 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 97.52 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே, நாடு முழுவதும் இன்று முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு  அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் 24 சுங்கச்சாவடிகளில், 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. IPL 2022: ஐபிஎல் நேற்றைய ஆட்டத்தில், சென்னை … Read more

இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு..அடுத்தடுத்து உயரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை.!

சுங்கச்சாவடி கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று சரக்கு லாரி உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.120 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் தமிழக சுங்கச்சாவடிகளை கடந்த வாகனங்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது. அறியாத சில … Read more

புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை! – இன்ஸ்பெக்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்… நீதிபதி அதிரடி

தன்னை தாக்கிவிட்டதாகப் புகார் அளித்தவரின் மனுவை விசாரிக்காத இன்ஸ்பெக்டர் ரூ.25 ஆயிரம் இழப்பீடு செலுத்தவேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள இலுப்பையூர் கிராமத்தைச் சார்ந்தவர் பிரகாசம். இவர் செந்துறை தி.மு.க ஒன்றிய பிரதிநிதியானவர். இவருக்கு இடப் பிரச்னை சம்பந்தமாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. செல்வராஜ் என்பவரும் மேலும் 5 பேரும் பிரகாசத்தைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு … Read more

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி – தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அறிவிப்பு

பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அறிவிப்பு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் போதே 1LB, 4LB ஆகிய படுக்கைகளை பெண்களுக்கென ஒதுக்கீடு செய்ய உத்தரவு அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேக படுக்கைகள் ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு வெளியூர்களுக்கு செல்லும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனிப் படுக்கை வசதி பேருந்துகள் புறப்படும் வரை, குறிப்பிட்ட படுக்கைகளுக்கு பெண்கள் … Read more

ஓபிஎஸ், இபிஎஸ்-ஸுக்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

சென்னை: அதிமுக கர்நாடக மாநில செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும், அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பதவி வகித்த வா.புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணைஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் கடந்தாண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தனர். இதை எதிர்த்து புகழேந்தி, சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் இருவரும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்திருந்தது. … Read more