கேரளாவில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் மேற்கு வங்கத்தில் உள்ள சொந்த ஊருக்கு படிப்பைத் தொடர தனியாக சென்ற சிறுமி

இடுக்கி: படிப்பைத் தொடர்வதற்காக பெற்றோருக்குத் தெரியாமல் கேரளாவில் இருந்து 14 வயது சிறுமி மேற்கு வங்கம் சென்றார். மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி பெராய். மிட்னாப்பூரில் உள்ளடங்கிய கேரி என்ற கிராமத்தில் பெற்றோருடன் வசித்து பள்ளியில் படித்து வந்தாள். மிகவும் பின்தங்கிய அந்த கிராமத்தில் விவசாயம், மீன்பிடித்தல் முக்கிய தொழில். ஆண்களில் பலருக்கு வேலையில்லை. இதனால், கேரளாவுக்கு தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரிய அங்கிருந்து பல குடும்பங்கள் கேரளாவில் இடுக்கி மாவட்டத்துக்கு … Read more

அமைதி பேச்சுவார்த்தை தொடரும்: ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் அறிவிப்பு

கீவ்: ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடரும்என்று இரு நாடுகளும் அறிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளிடையே போர் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி முயற்சி செய்து வருகிறது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் அண்மையில் சந்தித்துப் பேசினர். அப்போது தலைநகர் கீவ், செர்னிஹிவ் நகரங்களில் படைகளை குறைக்க ரஷ்யா ஒப்புக் கொண்டது. இதன் ஒரு பகுதியாக … Read more

பீஸ்ட், கேஜிஎஃப் 2 படங்களுக்கு முன் வெளியாகும் சூர்யாவின் படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ எதற்கும் துணிந்தவன் ‘. அண்மையில் வெளியான சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியானது சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் … Read more

ரஷ்யப் படைகளின் தாக்குதலால் 210 குழந்தைகள் உள்பட 5 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்

ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதலால் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. மரியுபோலில் குடியிருப்பு கட்டிடம், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் பெரிதும் சேதமாகி உள்ளன. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. அங்கு 210 குழந்தைகள் உள்பட ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடிசைகளில் தீ விபத்து.. குடும்பத்தினர் மீட்கப்பட்டதால் உயிர்சேதம் தவிர்ப்பு

ஹிமாச்சல் பிரதேச மாநிலம் உனாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடிசை பகுதியில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் சுமார் 150 குடிசைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின. Bathu பகுதியில் உள்ள குடிசைகளில் தீ பற்றியதாக கிடைத்த தகவலின் பேரில், தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்ற மீட்பு வீரர்கள் பலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தொழிலாளர்களும் அவர்களது குழந்தைகளும் உரிய நேரத்தில் மீட்கப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து … Read more

ஹவுத்தி தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி… 2 இந்தியர்கள் உள்ளிட்ட 25 பெயர்களை வெளியிட்டது சவுதி அரேபியா..

ஏமன் அரசுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களின் பட்டியலை சவுதி அரேபியா வெளியிட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சவுதி வெளியிட்டுள்ள 25 பெயர்களை கொண்ட பட்டியலில் சிரஞ்ஜீவ் குமார் சிங் என்ற இந்தியர் முதல் இடத்தில் உள்ளார். பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 25 பெயரில் 10 தனி நபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் அடங்கும், இதில் … Read more

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் – புதிய சாதனை படைத்த பிராவோ

மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணி  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணியின் பிராவோ ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன்மூலம் 153 இன்னிங்சில் 171 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இலங்கையின் மலிங்கா 122 இன்னிங்சில் 170 விக்கெட் வீழ்த்தி … Read more

சிறுசேமிப்பு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

புதுடெல்லி: நடப்பு 2022-23 நிதி ஆண்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக, முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 2022 முதல் ஜூன் 2022 வரை) சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சகம் கூறி உள்ளது. இதையொட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- * முதல் காலாண்டில் பி.பி.எப். என்னும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீத வட்டியும், என்.எஸ்.சி என்கிற தேசிய சேமிப்பு சான்றிதழ் நிதிக்கு 6.8 சதவீத வட்டியும் தொடரும். * … Read more

எல்லைப்பிரச்சினையில் இந்தியாவுடனான பேச்சு ஆக்கப்பூர்வமானது- சீனா கருத்து

பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன தரப்பில் இருந்து இந்தியா கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகிறது என இந்தோ-பசிபிக் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை பாதுகாப்பு மந்திரி ஏலி ராட்னர் கூறி இருக்கிறாரே?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் உ கியான் பதில் அளிக்கையில், “எல்லை பிரச்சினையை பேச்சுவார்த்தை, ஆலோசனை … Read more

அரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்க உத்தரவு

சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. படுக்கை எண் 1LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்து இணையத்தில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. பேருந்து புறப்படும் வரை பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாதபட்சத்தில் 2 படுக்கைகள் பொது படுக்கையாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.