இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு தொற்று உறுதி; 52 பேர் உயிரிழப்பு..!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.2 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 8.40 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 1335 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,25,775 -ஆக உயர்ந்தது.* புதிதாக 52 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 67 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 67 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.40,000 அபாரதமும் விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து சேயூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி – பேபிஷாலினி தம்பதியரின் இரட்டை பெண் குழந்தைகளுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரகாஷ் (30) என்பவன் கடந்த 20.06.2020 அன்று பாலியல் தொல்லை கொடுத்ததோடு இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். … Read more

பிரிட்டன் அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சு| Dinamalar

புதுடில்லி : பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஜ் டிராசுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைன் விவகாரம் உட்பட, பல்வேறு பிரச்னைகள் பற்றி பேசினார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் லிஜ் டிராஸ், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று டில்லியில் சந்தித்தார். இருவரும், ரஷ்யா – உக்ரைன் போர், இருநாட்டு உறவுகள் உட்பட, பல்வேறு பிரச்னைகள் பற்றி ஆலோசித்தனர். ‘உக்ரைன் மீது, ரஷ்யா நடத்தி வரும் போரால், உலகின் அமைதியும், பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாடுகள் … Read more

சுகாதார சேமிப்பு கணக்கு என்றால் என்ன.. இதனால் என்ன பயன்.. யாரெல்லாம் தொடங்கலாம்..!

கடந்த சில காலாண்டுகளாகவே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மிக அதிகமாகவே இருந்து வருகின்றது. மக்கள் பெரும்பாலும் மருத்துவ கட்டணங்களை செலுத்த இன்சூரன்ஸ் திட்டங்களையே நம்பியுள்ளனர். ஆனால் தற்போது சுகாதார சேமிப்பு கணக்குகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது எனலாம். உண்மையில் சுகாதார சேமிப்பு கணக்குகள் என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன. 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..! பலரும் இந்த மருத்துவ செலவுக்கு இன்சூரன்ஸ் திட்டங்களே சரியான ஆப்சனாக … Read more

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் வடக்கு மாகாணத்தை தவிர நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 … Read more

மு.க. ஸ்டாலின் டெல்லி பயணத்தின் மர்மத்தை விளக்குவாரா? எடப்பாடி பழனிசாமி கேள்வி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், டெல்லி பயணத்தின் மர்மத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்குவாரா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோரை சந்தித்தார். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், டெல்லி … Read more

இரு சக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து.. பரிதாபமாய் பலியான மாணவன்..!

இரு சக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது யாசிம். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங்  படித்து வந்தார். சம்பவதன்று, வகுப்பு முடிந்து நண்பர்களுடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இந்த விபத்தில் முகமது யாசிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரின் நண்பர் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து விரைந்து … Read more

கர்நாடகா: தீண்டாமை ஒழிப்பு திட்டத்துக்கு பட்டியலின சிறுவனின் பெயரும், புறக்கணிக்கப்பட்ட குடும்பமும்!

கர்நாடக அரசின் தீண்டாமை ஒழிப்புத் திட்டத்துக்குப் பட்டியலின சிறுவனின் பெயர் சூட்டப்பட்ட நிலையில், அந்த கிராமம் சிறுவனின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது. அதனால், வாழ்வதற்கு வேறு இடம் தேடி அந்த குடும்பம் செல்லும் நிலை உருவாகியுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில், சாதி பாகுபாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு, `வினய சமரஸ்ய யோஜனா எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் அம்பேத்கரின் பிறந்த நாளான … Read more

தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமல்

தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளில் 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்ததுடன், கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை உபயோகிப்பாளர்களுக்கான கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ந்தேதி 24 சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் 1-ந்தேதி 21 சுங்கச்சாவடிகளுக்கும் உயர்த்தப்படுகிறது. அந்தவகையில், 24 சுங்கச்சாவடிகளில் உபயோகிப்பாளர்கள் … Read more