கரோனா தொற்றால் இறந்தவரின் குடும்பத்தினர் நிவாரணம் பெற 90 நாட்களுக்குள் விண்ணப்பம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற, இனி 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,300 மனுக்களுக்கு ரூ.50 … Read more

பாகிஸ்தானை போல திருமண விழாவில் விருந்தினர், உணவு வகைகளை குறைக்க சட்டம்: மக்களவையில் காங்கிரஸ் எம்பி ஜஸ்பீர் சிங் கோரிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜஸ்பீர் சிங் கில் மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது நேற்று கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வின்போது மணமகள் மற்றும் மணமகன் தரப்பிலிருந்து தலா 50 விருந்தினர்கள்தான் கலந்துகொள்ள வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. இதுபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் கொண்டுவர வேண்டும். இதனால், இந்திய மக்களின் சேமிப்பை நாம் பாதுகாக்க முடியும். இந்தியாவில் சில திருமண விழாக்களில் 289 வகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன. உணவுக்கென்று ஒரு நபருக்கு ரூ.2,500 செலவிடப்படுகிறது. எனவே, … Read more

என் பதவியை பறிக்க அமெரிக்கா சதி செய்கிறது: இம்ரான் கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: எனக்கு எதிராக அமெரிக்கா சதி செய்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்ந்து, கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சி கள் சார்பில் கடந்த 28-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை யில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே இம்ரான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முத்தாஹிதா குவாமி இயக்கம் வாபஸ் பெற்றது. இதனால் இம்ரான் கான் அரசின் பலம் 164 ஆக … Read more

பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர்…வெளியான தகவல்…!

விஜய்யின் பீஸ்ட் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே விஜய்யின் படங்களுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவிவருவது இயல்பான ஒன்றுதான். இருப்பினும் இப்படத்தில் இளம் முன்னணி இயக்குனர் நெல்சன் உடன் விஜய் கைகோர்த்துள்ளது தான் எதிர்பார்ப்பு அதிகரிப்பதற்கான காரணமாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் நெல்சன் பொதுவாக கமர்ஷியல் சினிமாவிற்கு அப்பாற்பட்டு படங்களை இயக்கக்கூடியவர். ஆனால் விஜய்யோ கமர்ஷியல் சினிமாவை விரும்பக்கூடியவர்.எனவே இவர்கள் இருவரும் சேர்ந்த பீஸ்ட் படம் எப்படி உருவாகியுள்ளது என்பதை காணவே ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். பீஸ்ட் … Read more

கடும் அச்சத்தில் ஜனாதிபதி கோட்டபாயவின் ஆஸ்தான ஜோதிடர்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆஸ்தான ஜோதிடரான அநுராதபுரம் ஞானக்கா தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறிய போது தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய பதற்றத்தின் போது ஜனாதிபதி மற்றும் இராணுவ தளபதியை அழைத்த ஞானக்கா உடனடியாக தற்போது உள்ள பாதுகாப்பை விடவும் அதிக பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார். காளி அம்மனின் சக்தி உள்ளதாக கூறி மக்களை ஏமாற்றும் ஞானக்காகவுக்கு ஜனாதிபதி … Read more

தினமும் 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சந்தைக்கு அனுப்ப ஜோ பைடன் முடிவு

தினந்தோறும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சேமிப்புக் கிடங்குகளில் இருந்து சந்தைக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார். அடுத்த ஆறுமாத காலத்துக்கு ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் அவர் இதுவரை வரலாற்றில் எடுக்கப்படாத முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது. Source link

புர்கா அணிந்து வந்து சிபிஆர்எப் முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண் கைது

ஜம்மு காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் புர்கா அணிந்து கொண்டு வந்து பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சிஆர்பிஎஃப் முகாமில் புர்கா அணிந்த பெண் ஒருவர் வெடிகுண்டு வீசிய கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட பெண் லஷ்கர் இ தொய்பாவின் கிளை இயக்கமான OGWவை சேர்ந்தவர் என்றும் அவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் Source link

வார ராசிபலன்: 1.4.2022 முதல் 7.4.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் ஆஃபீஸருங்களோட ஆதரவும், சலுகைகளும், ஹெல்ப்பும், சப்போர்ட்டும் கெடைக்குங்க. உங்களோட சுய முயற்சியால வீட்ல மகிழ்ச்சி பொங்கும். பழைய முயற்சிகளால புதிய சக்ஸஸ் வரும். உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். அதிக லாபத்தோட புதிய பணி/ பிசினஸ் வாய்ப்பு வந்து சேரலாம். நண்பர்களுக்கு உதவி செய்து நெகிழ்ச்சியளிப்பீங்க. பெண்களால் நன்மையடைவீங்க. இந்த வாரம் புதன்கிழமை நல்ல நியூஸ் ஒண்ணு வரும். பரபரப்புகள் குறைந்து நிம்மதி அதிகரிக்கும். உற்சாகமான.. ஹாப்பியான .. குதூகலமான வாரம். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. … Read more

தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் தினமும் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றும் 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. இன்றும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் முக்கிய இடங்களில் நேற்று … Read more

கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன: முககவசம் அணிதல் தொடர வேண்டும்

புதுடெல்லி : சீனாவில் தோன்றி உலகையே உலுக்கி வந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இந்த தொற்று பரவத்தொடங்கியதும் மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதியன்று பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள், பொது போக்குவரத்து நிறுத்தம், பள்ளி, கல்லூரிகள் அடைப்பு, வணிக வளாகங்கள் மூடல், தியேட்டர்கள் மூடல் இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் … Read more