எரிபொருட்கள் விலையை குறைக்க ஜோ பைடன் நடவடிக்கை

வாஷிங்டன் : உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகச்சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. இந்த நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் கவலை அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், எரிவாயு விலையை குறைக்கின்ற வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளார். அந்த நாட்டின் கையிருப்புகளில் இருந்து தினமும் 10 லட்சம் பீப்பாய் கச்சா … Read more

பொருளாதார நெருக்கடியை தடுக்க இலங்கை அரசு தவறியதை கண்டித்து அதிபர் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கொழும்பு: கொழும்புவில் அதிபர் கோட்டபய ராஜபக்சே வீட்டை இரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பொருளாதார நெருக்கடியை தடுக்க இலங்கை அரசு தவறியதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மிரிஹானாவில் நடந்த போராட்டத்தில் போலீசார் – பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பத்திரிகையாளர்கள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விலையேற்றத்திற்கு இடையே நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

டெல்லி: எரிபொருள் விலையேற்றத்திற்கு இடையே நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் 26 சுங்கச்சாவடிகளில் 40 சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சிதம்பரம்: சாலையோர பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்த அரசுப்பேருந்து – 6 பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரசுப்பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மயிலாடுதுறை நோக்கி புறப்பட்ட பேருந்து புறவழிச்சாலையில் சென்றபோது எதிரே வந்த காரின்மீது மோதாமல் இருக்க திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதில் சாலையோர பள்ளத்தில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 6 பேர் படுகாயமுற்றனர்.  இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த அண்ணாமலைநகர் போலீசார் மற்றும் … Read more

ரஷ்யாவிடம் கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதியா? என்ன சொவ்கிறது இந்தியா?

இந்தியாவை விட ஐரோப்பிய நாடுகள்தான் ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மீது அடுக்கடுக்காக பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இந்தச் சூழலில், கடந்த காலங்களைவிட, தற்போதுதான் ரஷ்யாவிடம் இருந்து அளவுக்கு அதிகமான வகையில் ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். குறிப்பாக … Read more

ரஷ்யா – உக்ரைன் போரால் கூடங்குளம் திட்டம் பாதிப்பு

புதுடில்லி : ”ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரால், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது,” என, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையம், ரஷ்யா உதவியுடன் இயங்கி வருகிறது. இதற்காக, 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அணு உலைகளை ரஷ்யா வழங்கி வருகிறது. இதில் உள்ள இரண்டு அணு உலைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. 3 மற்றும் 4; 5 மற்றும் 6 அணு உலைகள், … Read more

3 மாதத்தில் 11.5 பில்லியன் டாலர் கடன்.. இந்தியாவின் மொத்த கடன் எவ்வளவு தெரியுமா..?!

மார்ச் 31 ஆம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் அக்டோபர்-டிசம்பர் 2021 காலகட்டத்தில் மட்டும் சுமார் 11.5 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த கடன் இந்த டிசம்பர் காலாண்டின் முடிவில் 614.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் இதேவேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் வெளிநாட்டுக் கடன் அளவு மத்தியிலான அளவீடு செப்டம்பர் 2021 இறுதியில் 20.3 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. யூரோ மற்றும் … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : … Read more

எடை இழப்பு, தீராத பல்வலி… கிராம்பில் இவ்வளவு நன்மை இருக்கு!

Tamil health tips: நம்முடைய வீடுகளில் எளிதாகக் காணக்கூடிய ஒரு மூலப்பொருளாக கிராம்பு உள்ளது. சமையலில் மிகவும் பிரபலமான மசாலாவாக இருக்கும் கிராம்பு பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய ஒரு மந்திர மூலிகையாகும். மேலும், பல்வேறு இது மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. கிராம்பை பச்சையாகவோ அல்லது அதிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயாகவோ உட்கொண்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். எனினும், இந்த கிராம்பு சில பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது. அந்த வகையில், கிராம்பின் அற்புத ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்கவிளைவுள் … Read more