ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு வைகோ கண்டனம்.!!!

சுங்கக் கட்டணம் உயர்வு, ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வை அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாகனம் சுங்கச் சாவடியை கடந்து எவ்வளவு தொலைவு பயணம் செய்கிறது என்ற வரையறை இல்லாமல், ஒரு சுங்கச்சாவடியைக் கடந்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வணிகம் சார்ந்த மற்றும் … Read more

`சீனா-வுக்கு – நோ; இந்தியாவுக்கு – யெஸ்' – இலங்கை மின் திட்ட ஒப்பந்தங்கள் கைமாறியது எப்படி?!

இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. அந்நிய செலாவணி கையிருப்புகள் குறைந்துபோனதால், எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, அத்தியாவசிய பொருள்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. நிலக்கரிப் பற்றாக்குறையால், மின் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், இலங்கை முழுவதும் தினசரி 10 மணிநேரம் மின் வெட்டு அமலிலிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் சீனாவின் ஆதரவோடு இலங்கை செயல்படுத்தவிருந்த மின் திட்ட ஒப்பந்தங்களைத் தட்டிப் … Read more

கருப்பு நிற தாளை கழுவினால் ரூ.500 நல்ல நோட்டு கிடைக்கும்.. பொது மக்களை ஏமாற்ற முயன்ற மோசடி கும்பல் கைது

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கருப்பு நிற தாளை கழுவினால் 500 ரூபாய் நோட்டு கிடைக்கும் என கூறி பொதுமக்களை ஏமாற்ற முயன்ற பெண் உள்பட 5 பேர் கொண்ட மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேட்டுக்குப்பம் ஆசிரமத்தில் சமையல் வேலை செய்து வந்த ராமசாமி என்பவர் நண்பர் தமிழிடம் தன்னிடம் கருப்பு நிறத்தில் உள்ள காகிதங்களை கழுவினால் அவை ரூபாய் நோட்டாக மாறும் என்றும் அதனை மாற்றித் தரும்படியும் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் சொன்ன … Read more

மாணவர் சேர்க்கை அதிகமுள்ள கல்லூரிகளில் 25 சதவீதம் கூடுதல் இடங்கள்: ஏஐசிடிஇ அனுமதி

சென்னை: மாணவர் சேர்க்கை அதிகமுள்ள பொறியியல் கல்லூரிகள் 25 சதவீதகூடுதல் இடங்களை உருவாக்கி கொள்ள ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சார்பில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான அங்கீகார வழங்கல் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பொறியியல் படிப்புகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல் பாடம் படித்திருப்பது கட்டாயமில்லை என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், மாணவர்களுக்கு பலவகையான நுழைவு மற்றும் வெளியேறும் விருப்பங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலாமாண்டு பொறியியல் படிப்பில் … Read more

ஆவணப்படம், குறும்படம் தயாரிப்பு உட்பட நான்கு திரைப்பட அமைப்புகள் என்எப்டிசி உடன் இணைப்பு

புதுடெல்லி: நான்கு திரைப்பட அமைப்புகள் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் (என்எப்டிசி) இணைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களைத் தயாரிப்பது, திரைப்பட விழாக்கள் நடத்துவது,படங்களைப் பாதுகாப்பது போன்றவற்றை தனித்தனி அமைப்புகள் செயல்படுத்துகின்றன. இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள 4 திரைப்பட அமைப்புகளை மத்திய அரசு நிறுவனமான தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திற்கு மாற்றி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டது. இது தொடர்பாக 3 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் திரைப்படம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் … Read more

நெட்டிசன் கேட்ட 'ஒத்த' கேள்வி: யாஷிகாவின் பதிலால் ஆடிப்போன ரசிகர்கள்…!

துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் , தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துள்ளார். அப்போது அதிவேகாமாக வந்த யாஷிகாவின் கார் … Read more

கொரோனா விதிகளைப் பின்பற்றச் சொல்லி ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கும் இயந்திர நாய்

சீனாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இயந்திர நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான ஷாங்காயில் மீண்டும் தொற்று பரவுவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட இயந்திர நாய் வீதிகளில் நடந்து செல்கிறது. தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் கூறிக் கொண்டே அந்த இயந்திர நாய் வலம் வருகிறது. இந்த நிலையில் ஷாங்காய் நகரில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களை ட்ரோன் மூலம் … Read more

இந்தியா – நேபாளம் இடையே நாளை முதல் பயணிகள் ரயில் சேவை துவக்கம்

இந்தியா, நேபாளம் இடையிலான பயணிகள் ரயில் சேவையை பிரதமர் மோடி, நேபாள பிரதமர் ஷெர் பகதுர் துயுபா கூட்டாக இணைந்து நாளை துவக்கி வைக்கின்றனர். இந்தியா, நேபாளம் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் 784 கோடி ரூபாய் மதிப்பிட்டில் ரயில்வே பணிகள் நடைபெற்றன. பீகார் மாநிலம் ஜெய்நகரில் இருந்து நேபாளம் குர்தா இடையிலான 35 கிலோ மீட்டர் தூர பயணிகள் ரயில் சேவைக்கான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் நாளை பிரதமர் மோடி காணொலி … Read more

பின்வாங்கும் ரஷ்ய படை! செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றம்

உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து பல வார ஆக்கிரமிப்புக்குப் பிறகு ரஷ்ய துருப்புக்கள் வெளியேறியதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர். “செர்னோபில் அணுமின் நிலையத்தின் எல்லையில் இனி வெளியாட்கள் யாரும் இல்லை” என்று செர்னோபில் விலக்கு மண்டலத்திற்குப் பொறுப்பான உக்ரைனின் அரசு நிறுவனம் அதன் Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று, மாநில அணுசக்தி நிறுவனமான Energoatom, பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து அவர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையம் மற்றும் பிற விலக்கு மண்டலங்களிலிருந்து ரஷ்ய … Read more

சோபியான் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் துர்க்வாங்கம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் நேற்று இரவு பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பல மணி நேரம் என்கவுண்டரில் ஒரு … Read more