பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: கேரளாவில் இன்று முதல் பஸ் கட்டணம் உயர்வு

திருவனந்தபுரம் : கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கேரளாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பஸ் கட்டணம் உயர்கிறது. அரசு பஸ் உள்பட அனைத்து பஸ்களின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆக உயர்வு செய்யப்பட்டு உள்ளது. அதே போல் பஸ்களில் கி.மீ. கட்டணம் 90 பைசாவில் இருந்து, ரூ.1 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆட்டோக்களில் குறைந்த கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், … Read more

ரஷிய நாணயத்தில் எரிவாயு வாங்காவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து: உலக நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

மாஸ்கோ : உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் தங்களிடம் ரஷிய நாணயமான ரூபிளைக் கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என கூறி உள்ளார். இன்று (ஏப்ரல்-1) முதல் இது அமலுக்கு வருகிறது. இதற்காக ரஷிய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்படும், அவற்றின்மூலம் வெளிநாட்டு பணம், ரூபிளாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி புதின் குறிப்பிடுகையில், “யாரும் எங்களுக்கு இலவசமாக … Read more

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406-க்கு விற்பனை..!

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406-க்கு விற்பனை செய்யப்படுகிறது . 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக  காஸ் சிலிண்டர் விலை ரூ.965.50-ஆக தொடர்கிறது.

15ம் கட்ட பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்தது: சீனா கருத்து

புதுடெல்லி: சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த கர்னல் வு கியான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியா-சீனா இடையேயான லடாக் எல்லை பிரச் னை தீர்ப்பதற்காக இருநாட்டு ராணுவங்களுக்கு இடையே நடந்த 15வது சுற்று பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிக்கும் விதமாகவும், ஆக்கபூர்வமாகவும் இருந்தது. எல்லை பிரச்னையை சரியாக கையாள சீனாவும், இந்தியாவும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், மூன்றாம் தரப்பினரின் தலையீட்டை உறுதியாக எதிர்க்கின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது சுங்கக்கட்டண உயர்வு – தொடங்கியது வசூல்!

தமிழ்நாடு முழுவதும் 24 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளைக் கடந்த வாகன ஓட்டிகள் உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்களைச் செலுத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் பயன்பாட்டுக் கட்டணம் 5 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை உயர்த்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை – வானகரம், சூரப்பட்டு, பட்டரைபெரும்புதூர், நல்லூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் … Read more

மாநிலங்களவையில் 72 பேர் ஓய்வு: நினைவுகளை பகிர்ந்துகொண்ட எம்.பி.க்கள்- நெகிழ்ச்சியான தருணம்

மாநிலங்களவை எம்.பி.க்கள் 72 பேர் ஓய்வுபெறுவதையொட்டி நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்ச்சியில், கட்சி எல்லைகளை கடந்து சக எம்.பி.க்கள் தங்கள் இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பெரும்பாலான எம்.பி.க்கள் உணர்ச்சிவசப்பட்டாலும், சில நெகிழ்வான தருணங்களும் இருந்தன. நாடாளுமன்றம் என்றாலே கூச்சல், குழப்பம், அமளி, வெளிநடப்பு, ஒத்திவைப்பு என்பதையே அதிகம் கேள்விப்படும் நிலையில், மாநிலங்களவையில் நேற்று உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளை காணமுடிந்தது. ஜூலை மாதத்திற்குள் ஓய்வுபெறும் தமிழகம் உள்பட 19 மாநிலங்களைச் சேர்ந்த 7 நியமன உறுப்பினர்கள் உள்பட 72 … Read more

பழங்களில் இருந்து மது தயாரிக்க கேரள அரசு அனுமதி

திருவனந்தபுரம் : பழங்களில் இருந்து மது தயாரிக்க அனுமதி தர கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில், மதுவின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, பழ வகைகளில் இருந்து மது தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், முந்திரி, பலா, அன்னாசி, வாழைப் பழங்களில் இருந்து, குறைந்த போதை தரும் மது தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. திருவனந்தபுரம் : பழங்களில் இருந்து … Read more

மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை குறைப்பதற்கு நடவடிக்கை

நாளை முதல், மின்சாரம் துண்டிக்கப்படும்  நேரம் மட்டுப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதன்படி, நாளொன்றில் மின் துண்டிப்பு காலம் நான்கு மணி நேரமாக குறைக்கப்படும் என்று அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். மூன்று மாதகாலமாக மூடப்பட்டிருந்த கெனியோன் மின் உற்பத்தி நிலையத்தில் மீண்டும்  உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 60 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக் … Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய – மாநில அரசுகள் கட்டுக்குள் வைக்க வேண்டும்.. சரத்குமார் வலியுறுத்தல்.!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய – மாநில அரசுகள் கட்டுக்குள் வைக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தி உள்ளார். கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 5 காசுகளும், டீசல் விலை 6 ரூபாய் 9 காசுகளும் உயர்ந்து, தற்போது தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 107.45 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 97.52 ரூபாய்க்கும் விற்கப்படுவது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா … Read more