Month: April 2022
16வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த 45வயது நபர் போக்சோவில் கைது
கோவையில் 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் 12 ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த சிறுமியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி திருப்பதி அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டது மட்டுமின்றி பல இடங்களுக்கு அழைத்து … Read more
வன்னியருக்கான 10.5% உள் இடஒதுக்கீடு செல்லாது: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்; தமிழக அரசு, பாமக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி
சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்பிசி) 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரியில் எம்பிசி பிரிவில் உள்ள வன்னியர் … Read more
மார்ச் 31-ம் தேதியுடன் கெடு முடிந்தது; ஆதார்-பான் இணைக்காதவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்: வருமான வரித்துறை அறிவிப்பு
புதுடெல்லி: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். இதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி ஆகும். இவ்விதம் இணைக்காதவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இவ்விதம் இணைக்காத நிரந்தர கணக்கு எண் (பான்) ஓராண்டுக்கு செல்லுபடியாகும். இதன் மூலம் மார்ச் 2023 வரை வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார்-பான் … Read more
பங்குச் சந்தை வர்த்தகத்தை இரண்டு மணி நேரமாக மட்டுப்படுத்த முடிவு!
தினசரி வர்த்தக நேரத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை (CSE) தீர்மானித்துள்ளது. அதன்படி, நேற்று (31) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே பங்குச் சந்தை தினசரி வர்த்தகத்திற்கு திறந்திருந்ததுடன், இன்று (01) தினசரி வர்த்தக காலம் 2 மணிநேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்குச் சந்தையில் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலைப் பெற்றுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை (CSE) வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more
கிரீஸ் தலைநகர் ஏதென்சை தாக்கிய தூசு புயல்.. செந்நிறம் போல் நகர் பொழிவிழந்து காட்சி
கிரீஸ் தலைநகர் ஏதென்சில் வீசும் தூசு புயலால் வரலாற்று சிறப்புமிக்க ஆக்கிரபொலிஸ் பொழிவிழந்து காட்சி அளிக்கிறது. வட ஆப்பிரிகாவின் சகாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பிய தூசு புயல் மெல்ல பரவி ஐரோப்பிய நாடுகளை பதம் பார்த்து வருகிறது. செந்நிற போர்வை போர்த்தியது போல் நகர் முழுவதும் ஆரஞ்சு வர்ணத்தில் காட்சி அளிக்கிறது. கட்டடங்களில் படியும் தூசுக்களை சுத்தப்படுத்தும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர். தூசு புயலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து காணப்படுகிறது. … Read more
டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் இன்று முதல் ரத்து.
டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்ட 2000 ரூபாய் அபராதத் தொகை 500 ரூபாயாகக் குறைக்கப்பட்ட நிலையில் அதனை நீக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் காரில் ஓட்டுனர்கள் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தும் உத்தரவை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. டெல்லியில் கோவிட் பாதிப்பு மிகவும் … Read more
இலங்கையில் வெடித்துள்ள போராட்டம்: 5 முக்கிய புள்ளிகள்
இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இது மிகவும் அத்தியாவசியமான இறக்குமதிகளுக்கு கூட செலுத்துவதற்கு வெளிநாட்டு நாணயத்தின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையின் காரணமாக இலங்கை அரசால் எரிபொருள் ஏற்றுமதிக்கு பணம் செலுத்த முடியவில்லை, மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற தயாராக உள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் ஐந்து முக்கிய புள்ளிகள்: ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே போராட்டம் இலங்கையின் தலைநகர் கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட பேரணியை … Read more
ஏப்ரல்-01: பெட்ரோல் விலை ரூ.107.45, டீசல் விலை ரூ.97.52-க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.45 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.97.52 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
அசாம் உட்பட 3 மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு சட்டம் ரத்து: ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு
புதுடெல்லி: நாகலாந்து, மணிப்பூர், அசாம் மாநிலங்களில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக, ‘ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்’ அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம், சந்தேகத்துக்குரிய யாரையும் பாதுகாப்பு படைகள் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம். இதன் காரணமாக, நாகலாந்து மாநிலத்தில் கடந்தாண்டு டிசம்பரில் பஸ்சில் சென்ற அப்பாவி தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த 3 மாநிலங்களிலும் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து … Read more