60 வகையான மருந்துகளின் விலை: அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

60 வகையான மருந்துகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்சுலின் சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை இரண்டாயிரத்து 702 ரூபா 41 சாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுவிபரம் http://www.documents.gov.lk/files/egz/2022/4/2277-55_T.pdf

சென்னை 2வது விமான நிலையம் எங்கே அமைகிறது? 2 இடங்களில் ஆய்வு!

சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட, பன்னூர் மற்றும் பாரந்தூர் ஆகிய இரண்டு தளங்களில் தடைகள் உள்ளதால், தடைகளை கட்டுப்படுத்தும் மேற்பரப்பு ஆய்வு (Obstacle Limitation Surface Survey) நடத்தப்பட வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. இந்த ஆய்வுக்கு பிறகு, தளத்தைச் சுற்றியுள்ள தடைகள், செயல்பாடுகளின் சாத்தியக்கூறுகளை சரிபார்த்து,  இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தை அதிகாரிகள் இறுதி செய்ய முடியும். மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்குப் பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் … Read more

கவிப்பிரியாவின் மரணத்தை தற்கொலை என்று கூறி கடந்து சென்று விட முடியாது – டாக்டர் அன்புமணி இராமதாஸின் அதிர்ச்சி அறிக்கை.!

ராகிங் கொடுமையால் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில், காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், மாணவியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வேண்டும் என்றும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் பயின்று வந்த கவிப்பிரியா என்ற மாணவி ராகிங் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மாணவியின் தற்கொலைக்கு காரணமானோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், தற்கொலை செய்து … Read more

CSK : தோனி மீண்டும் கேப்டனாகிறார்! ஜடேஜா எடுத்த அதிரடி முடிவு

பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிந்தார். தோனி சென்னை அணியின் வீரராக விளையாடி வந்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்திருக்கிறார். தோனி, ரவீந்திர ஜடேஜா Official announcement! Read More: #WhistlePodu #Yellove @msdhoni @imjadeja — Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022 கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்துவிட்டு தான் விளையாட்டில் … Read more

வீட்டு வாசலில் காரை நிறுத்தி அதிக சத்தத்துடன் பாட்டு போட்டதை தட்டிக் கேட்டவரை கத்தியால் தாக்கிய இளைஞர்

நாமக்கல் அருகே, வீட்டு வாசலில் காரை நிறுத்தி அதிக சத்தத்துடன் பாட்டு போட்டதை தட்டிக் கேட்டவரை, மதுபோதையில் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுல்தான்பேட்டை பகுதியில் வசித்து வரும் பாலச்சந்தர் என்பவரின் மகன் சந்துரு. இவர்களுக்கு சொந்தமான காரை தங்களது வீட்டின் முன் நிறுத்த இடமில்லாததால், அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவரது வீட்டு முன்பு நிறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இரவு நேரங்களில் அந்த காரில் அமர்ந்து மது அருந்துவது, காரில் அதிக சப்தத்துடன் … Read more

3 ஆண்டில் 14,000 வங்கதேசத்தினரை திருப்பி அனுப்பிய அரசு

புதுடெல்லி: எல்லை பாதுகாப்பு படை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022 ஏப்ரல் வரை,இந்தியாவில் சட்டவிரோத மாக தங்கியிருந்த வங்கதேசத் தினர், தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல முயன்றபோது சர்வதேச எல்லையில் 9,233 பேர் பிடிபட்டனர். இதே காலகட்டத்தில் வங்க தேசத்தி லிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 4,896 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளில், இந்தியா – வங்கதேச எல்லையை கடந்த வங்கதேசத்தினர் 14,361 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். … Read more

மே 14 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு குட் நியூஸ்!

பஞ்சாப் மாநிலத்தில் வெப்ப அலை வீசுவதன் காரணமாக, வரும் மே மாதம் 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கோடைக் காலம் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வெப்பம் அதிகமாகக் காணப்படுகிறது. தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில், கோடை வெயில் கொளுத்துகிறது. மேலும் ஒருசில மாநிலங்களில், வெப்ப அலை வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக, பஞ்சாப் … Read more

இலங்கை வந்த விமானத்தில் நடுவானில் அவமதிக்கப்பட்ட ராஜபக்ஷ குடும்பம்

பங்களாதேஷ் டாக்கா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. நேற்று பிற்பகல் வந்த விமானத்தில் நடுவானில் வைத்து மஹிந்த, பசில், கோட்டாபய உள்ளிட்டவர்களை கேளி செய்யும் பாடல்கள் பாடப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கொருவர் அறியாதவர்கள், கப்புட்டு கா கா கா என பாடலாக பாடியுள்ளனர். விசேடமாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் கோட்டாபயவை ஜனாதிபதியாக்குவதற்காக விசேட விமானம் மூலம் இலங்கை வந்த குழுவினரே அந்த விமானத்தில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. நாட்டை … Read more

ரஷ்யாவின் 40 விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைனின் புகழ்பெற்ற விமானி போரில் வீரமரணம்

ரஷ்யாவின் நாற்பது விமானங்களைச் சுட்டு வீழ்த்திய உக்ரைனின் சிறந்த விமானியான ஸ்டீபன் தாராபல்கா போரில் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 29 வயதே ஆன விமானி தாராபல்கா ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்தே அந்நாட்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்திப் புகழ்பெற்றார். ஐந்துக்கு மேற்பட்ட விமானங்களை வீழ்த்தியதற்காகச் சிறந்த விமானி என்கிற பட்டத்தையும், கீவின் ஆவி என்கிற பட்டப்பெயரையும் பெற்றார். மார்ச் 13ஆம் நாள் அவர் போரில் உயிரிழக்கும் வரை ரஷ்யாவின் 40 விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக தி டைம்ஸ் … Read more