மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள வில்லோ ஸ்பா என்ற மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் … Read more

கைகள் கட்டப்பட்டு கோர நிலையில் 3 சடலங்கள்.. தொடரும் புடின் படையின் போர் குற்றங்கள்

உக்ரைனின் புச்சா நகரத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட 3 உக்ரைனியர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. பிப்ரவரி 24-ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அதிகப்படியான போர் குற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய போர்க் குற்றச் சாட்டுகளுக்கு ஒத்ததாக மாறிவிட்ட உக்ரைனின் புச்சா நகரத்தில் ஏப்ரல் 29 அன்று ஒரு குழியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மூன்று பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்தனர். “பாதிக்கப்பட்டவர்களின் … Read more

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு- பிரான்ஸ் அதிபர் உறுதி

30.4.2022 22:30: உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட விரும்புவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் கூறியிருக்கிறார். ராணுவ தளவாடங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மேக்ரான் உறுதி அளித்துள்ளார். 21:00: உக்ரைனின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் ரஷிய படைகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஏராளமான தானியங்களைக் கைப்பற்றுவதாக உக்ரைன் விவசாயத்துறை மந்திரி டாரஸ் பிசோட்ஸ்கி … Read more

பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து குழு அமைப்பு- உத்தரகாண்ட் அரசு தகவல்

புதுடெல்லி: அனைவருக்கும் பொதுவான,  பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து பாஜக ஆளும் மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன.  இந்நிலையில் டெல்லி சென்றுள்ள உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, செய்தியாளர்களிடம் பேசுகையில்,   தமது மாநிலத்தில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.  அதன் பின்னர் பொது சிவில் சட்ட வரைவு மசோதா குறித்து சட்ட நிபுணர்களின் கருத்துக்களையும் ஆய்வு … Read more

10 மாநிலங்களில் ஆளுநர்கள் நியமனம் ‘காக்கா’ பிடிக்கும் படலம் சுறுசுறுப்பு

புதுடெல்லி:  ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு 10 மாநிலங்களுக்கு நியமிக்கப்பட உள்ள ஆளுநர் பதவியை பிடிக்க, பாஜ.வில் இப்போதே மேலிடத்தில் ஆள் பிடிக்கும் வேலையில் பல தலைவர்கள் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலையிலும் , இதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலமும் முடிய உள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பாஜ.வின் பலத்தையும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் களமாக இத்தேர்தல் கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த … Read more

மூணாறில் சூடு பிடிக்கும் ஷூட்டிங்| Dinamalar

மூணாறு : மூணாறில் சுற்றுலாவைப் போன்று சினிமா படப்பிடிப்புகளும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.கேரளாவில் தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படும் மூணாறு சுற்றுலா உலக அளவில் பிரசித்து பெற்றுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதி சுற்றுலா பயணிகளை மட்டும் இன்றி சினிமாக்காரர்களையும் வசீகரித்ததால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளைச் சார்ந்த சினிமா படபிடிப்புகள் ஏராளம் நடந்தன. ரஜினி புதுக்கவிதை, முரளி நடித்த கீதாஞ்சலி, பாலசந்தர் இயக்கிய வானமே எல்லை, நடிகர் விஜய் நடித்த … Read more

பொதுப்பணியாளர்களாக மாறிய சூப்பர் குயின்கள்!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பான குயின் யார் என்பதையும் நிகழ்ச்சி குழு அறிவித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பொதுப்பணியாளர்களின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் சின்னத்திரை குயின்கள் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுகின்றனர். இதற்காக வெளியிடப்பட்ட ப்ரோமோவில் சுவாதி சர்மா, ஜனனி அசோக்குமார் இருவரும் துப்பரவு தொழிலாளர்களுக்கு உதவி … Read more

புதிய உச்சம் தொட்ட மின்சார தேவை…. எவ்வளவு மெகாவாட் தெரியுமா?

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகப்பட்ச மின்சார பயன்பாடு பதிவாகியுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், வியாக்கிழமை அன்று சுமார் 387.047 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் முந்தைய அதிகபட்ச மின் பயன்பாடு கடந்த மார்ச் மாதம் 29 அன்று 378.328 மில்லியன் யூனிட் ஆகும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர், மாநிலத்தின் அதிகபட்ச மின்சார தேவையாக மார்ச் 29 அன்று பதிவான 17,196 மெகாவாட் கருதப்பட்டு … Read more

உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் மா. சுப்ரமணியன்.!

சென்னை மடுவின்கரை மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். சென்னை மாநகரட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், மடுவின்கரை சென்னை மேல்நிலைப் பள்ளியில் டெமனாஸ் (TEMENOS) எனும் மென்பொருள் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பங்களிப்பு  (C.S.R) திட்ட நிதியின் கீழ் ரூ.52 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையினை மருத்துவம் மற்றும் … Read more