மே 14ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு…

சண்டிகர்: கொளுத்தும் வெயில் காரணமாக மே 14ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்து உள்ளார். நாடு முழுவதும் கோடைகாலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. தமிழ்நாட்டில் வேலூர் உள்பட பல பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. அதுபோல நாட்டில் பல பகுதிகளில் கோடை வெப்பம் மேலும் கடுமையாகி 50 டிகிரி செல்சியஸை தாண்டலாம் அதாவது 122 ° F ஐ … Read more

ஐபிஎல் கிரிக்கெட்- 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை அணி வெற்றி

மும்பை: ஐ.பி.எல் தொடரில் மும்பையில் நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் தேவ்தத் படிக்கல் 15 ரன்னும், சஞ்சு சாம்சன் 16 ரன்னும், மிட்செல் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.  ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். 16-வது ஓவரின் முதல் 4 பந்துகளை … Read more

குஜராத் துறைமுகத்தில் ரூ.450 கோடி மதிப்புள்ள ஹெராயினில் ஊறவைக்கப்பட்ட நூல் கட்டுகள் பறிமுதல்

குஜராத் தீவிரவாத தடுப்புப் படை மற்றும்  வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பிபாவாவ் துறைமுகத்திற்கு வந்த கப்பலில் கண்டெய்னரில் இருந்து ரூ.450 கோடி மதிப்புள்ள 90 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து குஜராத் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆஷிஷ் பாட்டியா கூறியதாவது:- ஈரானில் இருந்து பிபாவாவ் துறைமுகத்திற்கு 5 மாதங்களுக்கு முன்பு கப்பல் வந்தது. அங்கு சந்தேகத்திற்கு இடமான நான்கு பைகளில் சுமார் 395 கிலோ எடையுள்ள … Read more

கோடநாடு வழக்கு – ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேரம் விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் கோவையில் இரண்டாவது நாளாக இன்றும் 9 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், கடந்த 10 தினங்களுக்கு முன்பு முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் அவர்களது உறவினர்களிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் … Read more

29வது ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பதவியேற்பு| Dinamalar

புதுடில்லி : நம் ராணுவ தலைமை தளபதியாக பணியாற்றிய ஜெனரல் எம்.எம்.நரவானே நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, நாட்டின் 29வது தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று பதவியேற்றார். ராணுவ தலைமை தளபதி நரவானே நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, புதிய தலைமை தளபதியாக, துணை தளபதியாக இருந்த மனோஜ் பாண்டே, நேற்று நடந்த நிகழ்ச்சியில் பொறுப்பேற்றார்.பிப்., 1ல் துணை தளபதியாக நியமிக்கப்பட்ட மனோஜ் பாண்டே, அதற்கு முன் கிழக்கு பிராந்திய தளபதியாக பணியாற்றினார். … Read more

ஹிந்தியை ஏற்கமாட்டோம், ஹிந்தி படங்களை இயக்க துடிப்போம் : மோகன்ஜி விளாசல்

திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கியவர் மோகன்ஜி. அடுத்து பகாசூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் இயக்குனர் செல்வராகவன், நடிகர் நட்டி நடராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே ஹிந்தி தான் தேசிய மொழி என்ற சர்ச்சை சினிமா வட்டாரங்களிலும், விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் மோகன்ஜி கூறுகையில், ‛‛ஹிந்தியை ஏற்க மாட்டோம். ஆனால் ஹிந்தி படங்களை இயக்க துடிப்போம். ஹிந்தி படிக்க புடிக்காது. ஆனால் … Read more

பாக்.,கில் மீண்டும் போலியோ இரண்டு குழந்தைகள் பாதிப்பு| Dinamalar

இஸ்லாமாபாத் : நம் அண்டை நாடான பாகிஸ்தானில், இரு குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு இருப்பது, சுகாதார நிபுணர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.உலக அளவில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோய் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இந்நோய் பாதிப்பு தொடர்கிறது.பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியை சேர்ந்த, 2 வயது சிறுமி, சமீபத்தில் பக்கவாதத்தால் முடங்கினாள். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதில், அவர் போலியோவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி … Read more

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு அடுத்த மாதம் நிவாரணம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சமூக நல நிவாரண முறையொன்று அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று (29) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,இதற்காக அவசர தேவைகள் உலக வங்கி நிதியுதவியின் கீழ் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி ஏற்கனவே … Read more

தமிழக கல்வித் துறையில் ரூ32,000, ரூ45,000 சம்பளத்தில் வேலை: நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா?

School Education department invites application for Tamilnadu Education Fellowship: பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படும் புதுமையான முயற்சிகளுக்கு உதவும் வகையில், இளைஞர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகளுக்காக மொத்தம் 152 பேர் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் வகையில், “இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளி என் பெருமை” போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறையால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களுக்கு ஆதரவளிக்க, தமிழ்நாடு … Read more

பாட்டாளிகள் நாள் || பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வாழ்த்து.!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பாட்டாளிகள் நாள் வாழ்த்து செய்தி : உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14-ஆம் தேதி … Read more