கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், தடுப்பூசி செலுத்தவும் முன் வரவேண்டும் என்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் பேட்டியளித்த அவர், இன்று நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் 12 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் 40 லட்சம் பேர் முதல் தவணை கூட போட்டுக்கொள்ளாமல் உள்ளதாகவும் கூறினார். மேலும், 6 முதல் 12 வயதுடைய … Read more

சிங்கப்பூர் போன்று சென்னையிலும் தொங்கு பாலம்: பொழுதுப்போக்கு பூங்காவாக மாறும் வில்லிவாக்கம் ஏரி! 

சென்னை: சிங்கப்பூரில் உள்ள தொங்கு பாலத்தை மாதிரியாக வைத்து சென்னையில் வில்லிவாக்கம் ஏரியில் தொங்கு பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் உள்ள வில்லிவாக்கம் ஏரி உள்ளது. 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை மறு சீரமைப்ப செய்து பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.37 கோடி செலவில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி … Read more

சீனாவில் கட்டட விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 23 பேரின் கதி என்ன?

சீனாவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் அங்கிருந்த 39 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அண்டை நாடான சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங் ஷா நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், கட்டட இடிபாடுகளில் சுமார் 23 பேர் சிக்கி உள்ளனர். இந்த விபத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகளில் … Read more

வனப்பகுதியில் இருந்து வெளியேறி வீடு ஒன்றிற்குள் புகுந்து துள்ளித்திரிந்த மான்.. வலை வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விடுவிப்பு

ஆந்திராவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று, வீடு ஒன்றுக்குள் புகுந்துகொண்டு வெளியேறத் தெரியாமல் தவித்தது. நெல்லூர் மாவட்டத்தில் உள்ள இந்துகூறுபேட்டா கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான், வழிதவறிச்சென்று ஒருவரது வீட்டிற்குள் புகுந்தது. வீட்டு உரிமையாளர் அக்கம் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அதனை வெளியே துரத்த முயன்ற போது வெளியேறத் தெரியாமல் அது மிரண்டு வீட்டிற்குள்ளேயே சுற்றித்திருந்து பொருட்களை சேதப்படுத்தியது. வனத்துறைக்கு தகவல் தெரிவித்த போதும், யாரும் வராததால் அப்பகுதியினரே இணைந்து மானை வலை வைத்து பிடித்துச்சென்று … Read more

மொத்த அதிகாரத்தையும் உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைக்கும் புடின்: வெளியான பகீர் காரணம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ள நிலையில், தமது விசுவாசியான உளவுத்துறை தலைவரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உடல் நிலை தொடர்பில் நீண்ட நாட்களாக ஊகங்கள் பல வெளியாகி வந்தது. மேலும் அவர், அவர் வயிற்றுப் புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோய் பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், குறித்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 69 வயதான விளாடிமிர் … Read more

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிக்கட்ட 12 ஆண்டுகள் ஆகும்! இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை…

டெல்லி: கொரோனாவால் ஏற்பட்ட இந்திய பொருளாதார இழப்பை சரிக்கட்ட 12ஆண்டுகள் ஆகும் என இந்திய ரிசர்வ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 2035ம் ஆண்டுதான் மீளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்வ் வங்கியின் 2022ம் ஆண்டுக்கான பணம் மற்றும் நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாணயம் மற்றும் நிதி தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “புத்துயிர் அளிப்பது மற்றும் புனரமைத்தல்”  என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், கோவிட் 19 இடையூறுகளால் ஏற்படும் “இழப்பைக் … Read more

இந்தியை விரும்புவோர் படிக்கலாம்- அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை: திமுக மாணவரணி சார்பில், கல்வி, சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம் குறித்த தேசிய அளவிலான மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெறுகிறது. முதல் நாளான இன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசுகையில், இந்தியை திணிப்பதுதான் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்றும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் என்றும் தெரிவித்தார். இந்தியை விரும்புபவர்கள் படிக்கலாம், ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது … Read more

சில்மிஷம் செய்த வாலிபரை நடுரோட்டில் தாக்கிய இளம்பெண்

திருப்பதி: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடா அடுத்த கண்ணாவரம் விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது விமான நிலையம் அருகே பெண் ஊழியரின் பைக்கை வாலிபர் ஒருவர் தடுத்து நிறுத்தி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர் பைக்கை விட்டு இறங்கி கீழே கிடந்த கட்டையை எடுத்து அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். உங்களைப் போன்றவர்களால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு … Read more

ஆந்திரா to திண்டுக்கல்: காரில் ரகசிய அறை உருவாக்கி கஞ்சா கடத்தல் – மிரண்டுபோன போலீசார்!

காரில் ரகசிய அறையில் கஞ்சாவை மறைத்து கொண்டுசென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 70கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை வால்டாக்ஸ் சாலையில் இன்று காலை யானைகவுனி காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி போலீசார் சோதனை செய்தபோது, காரில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் கஞ்சா வாடை அடித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசார் சோதனையை மீண்டும் தீவிரப்படுத்தி … Read more

பீகார்: அமரர் ஊர்தி இன்றி உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்

பீகாரில் அமரர் ஊர்தி வழங்கப்படாததால் முதியவர் ஒருவர், தனது உறவினரின் உடலை பல கிலோ மீட்டர் சுமந்தே சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. நவாடா மாவட்ட மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழக்க, அவரது உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல அமரர் ஊர்தி வழங்கப்படவில்லை. அதனால், அவருடன் இருந்த முதியவர், உடலை தோளிலேயே சுமந்து வீட்டிற்கு நடந்துச் சென்றார். அதன் பின் ஆட்டோ உதவியுடன், உடல் கொண்டு செல்லப்பட்டது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM