நாடு கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியிலிருந்து உத்தியோகபூர்வமாக
வங்குரோத்து அடைந்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை
கூறியுள்ளார்.
நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலைமையில், வெளிநாட்டு
முதலீடுகள், வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் கொடுக்கல், வாங்கல்கள், வெளிநாட்டு
வர்த்தகம் என்பன நின்று போயுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,