அதுக்கு சான்சே இல்ல… அடித்துச் சொல்லும் ஐசிஎம்ஆர்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று கொரோனா அலைகள் வந்து சென்றுள்ளதால் நாட்டில் பொருளாதார பாதிப்பு, வேலையிழப்பு, மாணவர்களின் கல்வி பாதிப்பு என பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திய
பொதுமுடக்கம்
, தீவிர தடுப்பூசி திட்டம் போன்றவற்றின் காரணமாக, நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் வகை வைரசின் இந்த தாக்கம் நாளடைவில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் பரவி விடுமோ அதன் விளைவாக கொரோனா நான்காவது அலை இந்தியாவில் வந்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

பொதுமக்களின் இந்த அச்சத்தை போக்கும் விதத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (
ஐசிஎம்ஆர்
) தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினசரி பரிசோதனை குறைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது சாதாரணமாக வந்து போகக்கூடியதுதான்.

அன்றாட பாதிப்பு விகிதத்தைதான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தினசரி தொற்று பாதிப்பு அதிகரிப்பது பல்வேறு மாவட்டங்களில் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்தியாவில் கொரோனா நான்காவது அலை உருவாக வாய்ப்பே இல்லை. அதற்கான அறிகுறியும் தற்போது இல்லை என்று ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குனர் சமீரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் 190 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.