திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர் செல்வர் சூர்யாவுக்கும், பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பதினோராம் வகுப்பு மாணவர் தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் செல்வ சூர்யாவை கற்களால் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செல்வ சூரிய சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்த கோஷ்டி மோதல் தொடர்பாக 11ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு பிறகு மாணவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்செல்வன், சீபா பாக்கியமேரி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.