இந்தியாவில் சற்று குறைந்த கோவிட் பரவல்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று முன்தினத்தை விட நேற்று(ஏப்.,30) கோவிட் பரவல் சற்று(364) குறைந்துள்ளது. நேற்று 3,324 கோவிட் உறுதியானது. இதற்கு முன்தினம் 3,688 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.
தற்போது தினசரி தொற்று விகிதம் 0.71 சதவீதமாக உள்ளது. கோவிட் காரணமாக 19,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவிட்டில் இருந்து 2,876 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,36,253 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 5,23,843 ஆனது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.