இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 8 முறை கூடிய நாடாளுமன்றத்திற்கு மட்டும் 7 கோடியே 30 லட்சம் இலங்கை ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் எந்தவொரு பயனுள்ள முடிவும் எட்டப்படவில்லை என்றும் மக்கள் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் தாக்கல் செய்ய உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரமதசா தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து தனது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சேவை நீக்கி இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபயா உறுதி அளித்ததாக கூறப்பட்ட நிலையில், நம்பிக்கையில்லா தீர்மான முடிவை மீண்டும் எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.