உலகின் மிக உயரமான இயேசு சிலை இதுதான்!

பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் உள்ள கொர்கொவாடோ மலை மீது 125 அடி உயர இயேசு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக நிறுவப்பட்ட இந்த சிலை பிரேசிலின் நாட்டின் அடையாக சின்னமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், ரியோவில் உள்ள இயேசு சிலையைவிட உயரமான சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற நகரத்தில் உள்ள மலை மீது 141 அடி உயர இயேசு சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது.

உலகின் மிகப்பெரிய
இயேசு கிறிஸ்து
சிலை. என்காண்ட்டோ நகரின் மோரோதாஸ் ஆண்டனாஸ் மலையில் அமைக்கப்பட்டு விரைவில் பொதுமக்களின பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இந்த சிலை நிறுவப்பட உள்ளது என்று சிலைக்கு நிதியுதவி செய்த சங்கத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சினிமா பாணியில் உக்ரைன் அதிபரை கொல்ல முயற்சி: அதிர்ச்சி தகவல்!

கிறிஸ்ட் தி ப்ரொடெக்டர் என்ற பெயருடன் நிறுவுப்பட்டுள்ள இந்த இயேசுவின் சிலை திட்டமிட்டப்படி அமைக்கப்பட்டால், இதுவே உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.