உலக அளவில் 51.32 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

வாஷிங்டன்:
லக அளவில் 51.32 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று, சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 32 லட்சத்து 31 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 98 லட்சத்து 59 ஆயிரத்து 602 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 71 லட்சத்து 11 ஆயிரத்து 806 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 60 ஆயிரத்து 388 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.