ஐபிஎல் 2022: குஜராத், மும்பை அணிகள் வெற்றி

மும்பை:
பிஎல் தொடரில், குஜராத் பெங்களுரு அணிகள் இடையே நடந்த போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான்- மும்பை அணிகள் இடையே நடந்த போட்டியில் மும்பை அணியும் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில், குஜராத் பெங்களுரு அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரூ அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்தது. 171 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணி 9.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

மும்பை – ராஜஸ்தான் அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

159 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி, 19.2 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் டெல்லி – லக்னோ அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் சென்னை – ஹைதராபாத் அணிகளும் மோத உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.