ஐஎஸ்எம்சி நிறுவனம் 22 ஆயிரத்து 900 கோடி ரூபாய் முதலீட்டில் கர்நாடகத்தில் சிப் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
ஐஎஸ்எம்சி நிறுவனத்துடன் இதற்கான உடன்பாடு கையொப்பமாகியுள்ளதாகக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அபுதாபியைச் சேர்ந்த நெக்ஸ்ட் ஆர்பிட் வெஞ்சர்ஸ் மற்றும் இஸ்ரேலின் டவர் செமிகண்டக்டர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் ஐஎஸ்எம்சி ஆகும்.
கர்நாடகத்தில் அமையவுள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய சிப் தொழிற்சாலையில் நேரடியாக 1500 பேருக்கும் மறைமுகமாகப் பத்தாயிரம் பேருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.