இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல் விகிதம் கடந்த் மார்ச் மாதத்தினை விட ஏப்ரல் மாதத்தில் கூடுதலாக 25,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் 1, 67, 540 கோடி ஆகும்.
இதில், சி.ஜி.எஸ்.டி (CGST) 33,159 கோடி ரூபாயாகும். இதே எஸ்.ஜி.எஸ்.டி (SGST) 41,793 கோடி ரூபாயாகும்.
3 பங்குகளை வாங்கி போடுங்க.. நல்ல லாபம் கொடுக்கலாம்.. நிபுணர்கள் பலே கணிப்பு!
செஸ் வரி
பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலானது 6,705 கோடி ரூபாய் உள்பட ஐ.ஜி.எஸ்.டி. வசூல் 81,939 கோடி ரூபாய் ஆகும். இதே பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலானது 857 கோடி ரூபாய் உள்பட செஸ் வரி மூலம் 10,649 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
கூடுதல் வசூல்
கடந்த மார்ச் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகையை விட ஏப்ரல் மாதத்தில் 25,000 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 1,42,095 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20 சதவீதமாகும். முதல் முறையாக 1.5 லட்சம் கோடி ரூபாயினை ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் சாதனை
மார்ச் மாதத்தில் இ-வே பில்களின் எண்ணிக்கை 7.7 கோடியாகும். இது கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது 13% அதிகமாகும். பிப்ரவரி மாதத்தில் 6.8 கோடியாகும். இது நாட்டில் பொருளாதாரமானது மேம்பட்டு வருகின்றது.
ஏப்ரல் 2022ல் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 9.58 லட்சம் பரிவர்த்தனை மூலம், 57,847 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது. குறிப்பாக மாலை 4 மணி முதல் 5 மணி வரையில் 8000 பரிவர்த்தனை மூலம், 88,000 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
எவ்வளவு?
ஏப்ரல் 2022ல் GSTR – 3Bல் கிட்டதட்ட 1.06 கோடி ஜிஎஸ்டி ரிட்டர்ன் கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 97 லட்சம் கடந்த மார்ச் 2022 தொடர்பானவை. இதே சதவீத அடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் GSTR- 3B 84.7 சதவீதம் அளவுக்கும், கடந்த ஆண்டு ஏப்ரலில் 79.3 சதவீதம் அளவும் பதிவு செய்துள்ளது. இதே GSTR -1 பரிவர்த்தனை ஏப்ரல் மாதத்தில் 83.11 சதவீதம், இது கடந்த ஆண்டில் 73.9 சதவீதம் அளவுக்கு பரிவர்த்தனை இருந்தது.
GST revenue collected for April 2022: check details
GST revenue collected for April 2022: check details/கல்லா கட்டிய அரசு.. ஏப்ரலில் இதுவரை இல்லாதளவுக்கு உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்!