தூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார்புரம் பகுதியில் கல்வி வளர்ச்சி நிதிக்காக மக்களால் நடத்தப்பட்டு வரும் சாலையோர பதனீர் கடையில் திமுக எம்.பி கனிமொழி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பதனீர் வாங்கி பருகினர்.
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெறும் உழைப்பாளர் தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமான நிலையத்தில் இருந்து காரில் வந்த கனிமொழி, வழியில் இந்த கடையில் பதனீர் வாங்கினார். பின்னர் பதனீர் விற்பனை குறித்து அவர் வியாபாரிகளிடம் கேட்டறிந்தார்.