சங்கராபுரத்தில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாலியல் தொல்லை, கடத்தல் சம்பவங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே 16 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
சங்கராபுரம் அடுத்த பாசார் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரின் மகன் சின்னகவுண்டன் தனது 16 வயது சிறுமியை கடத்தி சென்றதாக, ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சின்னக்கவுண்டனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 16 வயது அந்த சிறுமியையும் மீட்டனர்.
காதல் விவகாரத்தில் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியதா? அல்லது முன்பகை காரணமாகவா? இல்லை பணம் கேட்டு மிரட்டுவதற்காக இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.