புதுடெல்லி,
குஜராத் மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று அதன் மாநில நிறுவன தினத்தை கொண்டாடுகிறது. 1960-ஆம் ஆண்டு இதே நாளில், முன்னாள் பம்பாய் மாநிலம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது. பம்பாய் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, குஜராத் மற்றும் மராட்டியம் ஆகிய இரண்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;-
“குஜராத் மாநிலம் உருவான தினத்தில், குஜராத் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். மகாத்மா காந்தி, சர்தார் படேல் போன்ற பல்வேறு தலைவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் சாதனைகளுக்காக குஜராத் மக்களால் பெரிதும் போற்றப்படுகிறார்கள். வரும் ஆண்டுகளில் குஜராத் மாநிலம் முன்னேற்றப் பாதையில் செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 2001 முதல் 2014 வரை குஜராத் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் பிரதமர் மோடி. குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தில் 1995ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.