கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், காதல் விவகாரத்தில் கோவையின் தான் பணிபுரிந்த நிறுவனத்தின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு அடுத்த மஞ்சாலுமூட்டையை சேர்ந்தவர் அனீஸ் (வயது 23). இவர் கடந்த ஒரு வருடமாக கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது பீளமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை 6 மாதமாக இவர் காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை அறிந்த இளம் பெண்ணின் பெற்றோர் கண்டிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அனீஸ் காதலித்து வந்த இளம் பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த அனீஸ் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று அதிகாலை தனது நிறுவனத்தின் ஒரு அறையில் உள்ள அறையில் அனீஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.