மும்பை: சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா விரைவில் இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக பாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. இதற்காக அவர் நடிப்புப் பயிற்சியையும் பெற்றுள்ளாராம். தங்களது மகள் விருப்பத்திற்கு பெற்றோர் சச்சின், அஞ்சலி எந்தத் தடையும் சொல்லவில்லையாம்.ஏற்கெனவே சாரா இந்தி சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அப்போது அதை சச்சின் மறுத்தார். தனது மகள் படிப்பில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். இப்போது சாரா அறிமுகமாவது பற்றிய செய்திகள் மீண்டும் வெளிவந்துள்ளன. அவர் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.