உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படைகளும் உக்ரைனைத் தாக்கி வருகின்றன. சர்வதேச கண்டனம், எதிர்ப்பு என எதையும் கண்டு கொள்ளாமல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், இரு தரப்புக்கும் இடையே இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித ஆக்கப்பூர்வமாக முடிவுகளும் எட்டப்படவில்லை. இதனிடையே, மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ள ரஷ்யா, அதற்கு விடுதலை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
அதேசமயம், உக்ரைன் அதிபர்
வொலோடிமர் ஜெலன்ஸ்கி
அவ்வப்போது தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். பல்வேறு வீடியோக்களையும் வெளியிட்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், போரின் தொடக்க கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், அவரும் அவரது மனைவியும் அவர்களது 17 வயது மகள் மற்றும் 9 வயது மகனை அதிகாலை எழுப்பி போர் தொடங்கி விட்டதாகவும், குண்டு மழை பொழிவதாகவும் தெரிவித்ததாக கூறியுள்ளார். ரஷ்யா தாக்குதலை தொடர்ந்த சில மணி நேரங்களிலேயே அதிபாரும் அவரது குடும்பத்தினரும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிபர் மாளிகையை கைப்பற்ற ரஷ்ய துருப்புகள் முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உக்ரைனை விட்டு சென்று விடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்திய போதும் அவர் செல்ல மறுத்து விட்டார் என்று பாதுகாப்பு படை தலைவர் ஆண்ட்ரிய் யெர்மாக் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கட்டட விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 23 பேரின் கதி என்ன?
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சினிமாவில்தான் இது போன்ற சம்பவங்களை பார்த்திருக்கிறோம். தனக்கும், தன் குடும்பத்துக்கும் குறிவைத்திருப்பதை தனது பாதுகாப்பு படை மூலம் அதிபர் அறியவந்தபோதும், அவர் தப்பி ஓட மறுத்து விட்டார்.’ என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ராணுவ உளவுத்துறை மூத்த அதிகாரி ஒலெக்சிய் ஆரெஸ்டோவிச் கூறுகையில், முதல் நாள் இரவில் அதிபர் மாளிகை வளாகத்தின் அருகே துப்பாக்கிச் சண்டைகள் நடந்தன. அதிபருக்கும், அவரது உதவியாளர்களுக்கும் குண்டு துளைக்காத ஆடைகள், துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. அதிபர் மாளிகையை கைப்பற்ற ரஷ்யா முயற்சித்தது. தெருவை மூட எங்களிடம் கான்கிரீட் பிளாக்குகள் இல்லை. அதிபர் மாளிகையை தகர்க்க ரஷ்ய துருப்புகள் 2 முறை முயற்சித்துள்ளனர். அப்போது அதிபரின் மனைவியும், அவரது குழந்தைகளும் அங்குதான் இருந்தனர்.’ என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில்
உக்ரைன் அதிபர்
தனது தைரியத்திற்காக உலகளவில் பாராட்டப்பட்டு வரும் நிலையில், மேற்கண்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.