சிறு வணிகர்களுக்கு மேலும் பிரச்சனை.. வணிக சிலிண்டர்கள் ரூ.100-க்கு மேல் அதிகரிப்பு!

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர்களுக்காக விலையானது, சர்வதேச சந்தையில் நிலவி வரும் மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று மாதத்தின் முதல் நாளான இன்று வணிக சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் இந்த மாத்திற்கான வணிக சிலிண்டரின் விலை 102.50 ரூபாய் அதிகரித்து, 2508 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா.. எந்த வங்கியில் பெஸ்ட்.. எங்கு எவ்வளவு வட்டி

2வது மாதமாக அதிகரிப்பு

2வது மாதமாக அதிகரிப்பு

கடந்த மாதமே 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலையானது 100 ரூபாய் உயர்ந்த நிலையில், இந்த மாதமும் அதிகரித்துள்ளது. மாதத்திற்கு மாதம் தொடர்ந்து சிலிண்டரின் விலையானது, தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை மேற்கொண்டு அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

பெட்ரோல் & டீசல் விலையும் அதிகரிப்பு

பெட்ரோல் & டீசல் விலையும் அதிகரிப்பு

ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அதிகரித்து வரும் நிலையில், இதுவே நிறுவனங்களுக்கான செலவினத்தினை அதிகரித்துள்ளது. குறிப்பாக நிறுவனங்களுக்கான லாகிஸ்டிக்ஸ் செலவினங்களை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது மேற்கோண்டு பிரச்சனையாக அமையலாம்.

சிறு குறு நிறுவனங்கள் பாதிப்பு
 

சிறு குறு நிறுவனங்கள் பாதிப்பு

இந்த விலையேற்றமானது சாமானிய மக்களை அதிகளவில் பாதிக்காவிட்டாலும், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதிக்கும்.

இதே சமையல் எரிவாயு விலையானது பெரியளவில் மாற்றமின்றி 965.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எங்கு எவ்வளவு விலை?

டெல்லி – ரூ.2355.50

மும்பை – ரூ.2307

கொல்கத்தா – ரூ.2455

சென்னையில் – ரூ.2508

இதே தலை நகரில் 5 கிலோ சிலிண்டரின் விலையானது 655 ரூபாயாக உள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இது கொரோனா பரவல், உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனையானது, சர்வதேச எரிபொருள் விலையினை ஊக்குவித்து வருகின்றது. இது சப்ளை சங்கியிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, விலை அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LPG price updates: Commercial LPG price hiked by Rs.102 per cylinder

LPG price updates: Commercial LPG price hiked by Rs.102 per cylinder/சிறு வணிகர்களுக்கு மேலும் பிரச்சனை.. வணிக சிலிண்டர்கள் ரூ.100-க்கு மேல் அதிகரிப்பு!

Story first published: Sunday, May 1, 2022, 15:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.