சென்னை அருகே பதினாறாவது நாள் கருமாதி தூக்கத்தின் உணவு பரிமாறும்போது, சோற்றில் மண் விழுந்த தகராறில், இரண்டு இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவான்மியூர் அருகே துக்க நிகழ்ச்சியில் மதுபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
திருவான்மியூர், மீனவர் குப்பம் பகுதியை சேர்ந்த அருண், சதீஷ், தினேஷ் ஆகிய 3 பேரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாக ஊரை சுற்றி வந்த இவர்கள், நேற்று இரவு அதே பகுதியில் நடந்த கருமாதி விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் மூன்று இளைஞர்களும் நன்றாக குடித்துவிட்டு உணவு அறிந்துள்ளனர். அப்போது, அருண் தனது செருப்பை கழட்டி தினேஷ் மீது விளையாட்டாக வீசியுள்ளார். இதனால், சாப்பாட்டில் மண் விழுந்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், அங்கிருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து அருண் மீதும், சதீஷ் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நண்பர்கள் இருவரை கொலை செய்த தினேஷ் திருவான்மியூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.