தமிழகத்தில் 14 மாவட்டங்களில் "செஞ்சுரி" அடித்த வெயில் – கடும் அவதியில் மக்கள்!

தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வட இந்தியாவில் வெப்ப நிலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த நூற்றாண்டில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் மார்ச் மாதம் முதல் வெப்ப நிலையின் தாக்கம் கணிசமாக அதிகரித்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட வட தமிழக மாவட்டங்களில் 37 டிகிரி-யில் இருந்து 43 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது.
image
மேற்கு மாவட்டங்களில் உள்ள வெப்பக்காற்று கிழக்கு திசை நோக்கி வீச படுவதால் வட தமிழக மாவட்டங்களில் வெப்ப நிலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை உயர்வால் பொதுமக்கள் வேலைக்கு செல்வோர் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. வெயிலில் நீண்ட நேரம் நிற்க முடியாத நிலையும் டிராபிக் போன்ற நிறுத்தங்களில் வெயிலில் நிற்பதற்கு பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். நேற்று 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 110.66 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து
அரியலூர்- 108 டிகிரி பாரன்ஹீட்
திருவண்ணாமலை -107 டிகிரி பாரன்ஹீட்
ராணிப்பேட்டை, வேலூர்- தலா 106 டிகிரி பாரன்ஹீட்
திருச்சி கிருஷ்ணகிரி- 105 டிகிரி பாரன்ஹீட்
image
கடலூர் விருதுநகர்- 104 டிகிரி பாரன்ஹீட்
சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை – தலா101 டிகிரி பாரன்ஹீட்
மதுரை -100 டிகிரி பாரன்ஹீட் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெயில் பதிவாகியுள்ளது.
உலகத்தில் தமிழகத்தில் கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப நிலையோடு அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: முதல் நாளிலே மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நர்ஸ் – உ.பியில் அதிர்ச்சி சம்பவம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.