தலைமை நீதிபதி என்.வி ரமணா கோரிக்கைக்கு செவி சாய்க்காத மத்திய அரசு

சனிக்கிழமையன்று நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மற்றும் முதல்வர்கள் மாநாட்டில், இந்தியத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்வைத்த இரண்டு முன்மொழிவுகளுக்கு, மத்திய அரசும், பாஜக ஆளும் மாநிலங்களும் விருப்பம் தெரிவிக்கவில்லை.

அவர், நீதித்துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக தேசிய அளவில் ஒரு சட்டப்பூர்வ அதிகாரம் வேண்டும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை தற்காலிகமாக நியமனம் செய்து, பெஞ்சில் உள்ள பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.

ஆனால், அவர் கோரிக்கைக்கு மாற்றாக நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு தேவைகளை நிவர்த்தி செய்ய மாநில அளவிலான அமைப்புகளை அமைப்பது குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாநிலங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஒரு முறை கூடுதல் நிதி உதவி வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

கிடைத்த தகவலின்படி, இந்திய தலைமை நீதிபதி தலைமையில் தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஆணையம் தேசிய அளவில் அமைக்கப்பட வேண்டும் என்றும், மாநிலங்களில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் இதேபோன்ற வழிமுறையை அமைக்க வேண்டும் என்றும் என் வி ரமணா முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கைக்கு, கேரளா போன்ற சில எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், மாநிலங்களின் உரிமைகளில் நுழையாத பட்சத்தில், இதனை ஏற்றுக்கொள்ளலாம் என கருத்து தெரிவித்தன.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறுகையில், இந்த முன்மொழிவுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் மாவட்ட நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி வழங்கினால் அத்தகைய அதிகாரம் தேவையில்லை என்று கருத்து தெரிவித்தார்.

மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறப்பு வழிமுறை தேவையில்லை என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்குவதாகவும், உள்கட்டமைப்பு மேம்பாட்டை நிர்வாகமே செயல்படுத்தும் என கருத்து தெவித்ததாக தெரிகிறது. இதே நிலைப்பாட்டை தான், பாஜக ஆளும் சில மாநிலங்களிலும் தெரிவித்துள்ளன.

பல தரப்பினரும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்ததையடுத்து, இந்திய தலைமை நீதிபதியின் முன்மொழிவு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், மாநில அளவில் அமைக்கப்படவுள்ள அமைப்பு, முதலமைச்சர் அல்லது அவரது பிரதிநிதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நிதிச் செலவு, செயல்படுத்தல் மற்றும் தொடர் நடவடிக்கை ஆகியவற்றைக் கண்காணிக்கும் வகையில் செயல்படுத்தப்படும்.

கூட்டத்தின் முடிவில் தலைமை நீதிபதி ரமணாவுடன் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, மாநில அளவில் இந்த அமைப்பு உருவாக்கப்படும் என்று முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். மாநில அளவில் நீதித்துறை உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு மாநில அரசுகளுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என்றார்.

அக்டோபர் 10, 2021 தேதியிட்ட கடிதத்தில் அவர் பரிந்துரைத்த உள்கட்டமைப்பு ஆணையத்தை அமைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தலைமை நீதிபதி கூறினார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 388 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் 66 இடங்களும், மும்பை உயர்நீதிமன்றத்தில் 37 இடங்களும், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் 37 இடங்களும், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 33 இடங்களும், பாட்னா உயர்நீதிமன்றத்தில் 26 இடங்களும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் 25 இடங்களும், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் 24 இடங்களும் காலியான உள்ளன.

காலிப் பணியிடங்களை நிரப்ப தற்காலிக நீதிபதிகளை நியமிப்பது சரியாக இருக்காது என உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காலியிடங்களையும் நிரப்பிய பிறகும் பணிச்சுமை அதிகமாக இருந்தால், அத்தகைய விருப்பத்தை பரீசிலக்கலாம் என கூறியிருந்தது.

நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அரசியல் கட்சியினரின் முயற்சியால் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் நீதித்துறையின் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்கும் செயல் என கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில முதல்வர்கள் பகவந்த் மான் மற்றும் எம்.எல் கட்டார் ஆகியோர் இரு மாநிலங்களுக்கும் தனித்தனி உயர் நீதிமன்றங்கள் சண்டிகரில் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டனர்

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க பஞ்சாயத்து அளவில் ஒரு அமைப்பை உருவாக்க பரிந்துரைத்தார்.

கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ், உயர்நீதிமன்றம் மற்றும் துணை நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு நிதி ஆணையத்திடம் இருந்து எந்த நிதியுதவியையும் மாநிலத்திற்கு கிடைக்கவில்லை. மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.