திருப்பத்தூரில், அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் முகிலன், டி.எம்.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அது கைகலப்பாக மாறியதாக சொல்லப்படுகிறது.
இதில் முகிலன் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் பின்தொடர்ந்து வந்து, முகிலனை கத்தியால் சராமாரியாக தாக்கி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, முகிலனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, தகவலறிந்து வந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.