வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் எதிர்வரும் 4ஆம் திகதி ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும்.
இந்த மேலடுக்கு சுழற்சி 6 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று இந்திய வானிலை நிலையம் தெரிவித்த்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரம் அடையும். அந்த காற்றழுத்த தாழ்பு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது அதைவிட தீவிரமாகவோ மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் நிலையம் அறிவித்துள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை எந்த திசையை நோக்கி நகரும் என்ற தகவல் தற்போதுள்ள நிலையில் தெரிவிக்கப்படவில்லை. தாழ்வுநிலை உருவானால் மட்டுமே எப்படி நகரும் என்பதற்கான தகவல் தெரிவிக்கப்படும்.
இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை புயல் எச்சரிக்கையாக மாறுமா? என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது.
வட இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி வெப்பத்தை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலம் பாந்தாவில் 116 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
இந்த தீவிர வெப்பமானது வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 3 நாட்களுக்கு வெப்ப அலையாகவோ, தீவிர வெப்ப அலையாகவோ தொடரும் என்றும், அதற்கு பிறகு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அங்கு வெப்பநிலை சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது.