வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாலக்காடு–கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரியில் நடத்துனர் இல்லாமல் பயணியர் பஸ் சேவையை தாமஸ் என்பவர் துவக்கியுள்ளார்.
இந்த பஸ்சில் ஓட்டுனர் மட்டும் இருப்பார். 45 இருக்கை கொண்ட இந்த பஸ்சில் டிக்கெட் எடுக்க வேண்டிய தேவையில்லை. பஸ்சில் வைக்கப்பட்டுள்ள மூன்று பக்கெட்டில் குறிப்பிட்ட கட்டணம் போட்டால் போதும்; பணம் இல்லாமலும் பயணம் செய்யலாம்.அடுத்த முறை இந்த பஸ்சில் பயணம் செய்யும் போது பணத்தை போட்டால் போதும்.
ஒவ்வொரு பஸ் நிறுத்தம் வரும்போது, பயணியர் பஸ்சில் உள்ள ‘பெல் பட்டனை’ அழுத்தினால், கதவு திறக்கப்படும். பஸ்சிலிருந்து இறங்கலாம். பயணியர் மீது முழு நம்பிக்கை வைத்து பஸ்சின் உரிமையாளர் தாமஸ் இந்த சேவை துவக்கியுள்ளார்.
பஸ் பயணக்கட்டணம் குறைந்தபட்சம், 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 4 கி.மீ., க்கு கூடுதலாக தலா 2 ரூபாய் செலுத்த வேண்டும்.புதுமையாக உள்ள இந்த பயணியர் பஸ் சேவைக்கு கேரள அரசின் போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.
Advertisement