`நாம வாழணும்னா…' தொடங்கி 'நோ மீன்ஸ் நோ' வரை அஜித்தின் மாஸான பன்ச் டயலாக்குள்| Photo Story

மே 1 அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள். அஜித்துக்கு மாஸான பிறந்தநாள். அஜித் படங்களில் இடம்பெறும் பஞ்ச் வசனங்களுக்கு பயங்கர மாஸ் இருக்கும். அப்படியான வசனங்கள் இதோ.

“என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா”

“உடம்புல கை இருக்கும் கால் இருக்கும் மூக்கு இருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்காது”

“காசுக்காக என்னவென்னலாம் பண்ணுவேன். ஆனா தன்மானத்துக்கு ஒரு தகராறுன்னா தலையே போனாலும்.. “

“என்னோட நண்பனா இருக்கத்துக்கு எந்தத் தகுதியும் வேணாம். ஆனா எதிரியா இருக்கதுக்கு தகுதி வேணும்.”

“சரித்திரத்த ஒரு நிமிஷம் திருப்பி பாருங்க. அது நமக்கு கத்து கொடுத்திருக்கது ஒன்னு தான். நாம வாழணுனா யாரை வேணாலும் எத்தனை பேர வேணாலும் கொல்லலாம்.”

“நீ எந்த சாதின்னு நினைக்கிறியோ நான் அந்த சாதி. இரத்தத்துல சாதியை பார்க்காத. மொத்தத்துல நான் உழைக்கிற சாதி.”

“ஜெயிக்கிறதுக்கு ஆயிரம் எதிரிகளை கொல்லலாம். தப்பில்லை. ஆனால் ஒரு துரோகிய உயிரோட விட்டா பெரிய தப்பு.”

அஜித்

“நான் பார்த்து பார்த்து தண்ணீர் ஊத்தி வளர்த்த வீட்டு மரம் கிடையாது. தானா வளர்ந்த காட்டு மரம். என்ன வெட்ட நினைச்சா கோடாரிகூட சிக்கிக்கும்.”

“நம்ம கூட இருக்கவங்கள நாம பார்த்துகிட்டா; நமக்கு மேல இருக்கவன் நம்மள பார்த்துப்பான்”

“திஸ் இஸ் மை *** கேம். இத எங்க ஆரம்பிக்கணும் எப்போ ஆரம்பிக்கணும் எப்போ முடிக்கணும்ங்கிறத நான் தான் முடிவு பண்ணணும்.”

அஜித்தின் ட்ரேட் மார்க் வசனமான `அது’ல தொடங்கி சமூக அக்கறை கொண்ட `நோ மீன்ஸ் நோ’ வசனம் வரை அவரது முத்திரை பதித்த வசனங்கள் ஏராளம். அவற்றில் உங்களுக்கு பேவரைட் எது என்பதை கமென்டில் சொல்லுங்க.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.