அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து வேகமாக பரவி வருகிறது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால், தீ மளமளவென கல்லினாஸ் பள்ளத்தாக்கு வழியே லாஸ் வேகாஸ் மற்றும் தெற்குப்பகுதியை நோக்கி பரவி வருகிறது.
ஒரு வாரத்திற்கு முன்பாக காஃப் பள்ளத்தாக்கில் பரவிய தீயும், ஹெர்மிட் மலைப்பகுதிகளில் பரவிய தீயும் ஒன்று சேர்ந்ததாகவும் அப்போது முதல் 97 ஆயிரத்து 64 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி தீயில் எரிந்து கருகியதாகவும், 32 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீ மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பல பகுதிகளில் குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.