நிலக்கரி தட்டுப்பாட்டால் மேட்டூரில் மின் உற்பத்தி நிறுத்தம்

Mettur thermal power plants stop Electricity production due to coal shortage: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும், தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் கொண்ட பழைய அனல் மின் நிலையம் ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின்‌ மூலம் நாளொன்றுக்கு 1,440 மெகாவாட்‌ மின்சாரம்‌ உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில், 840 மெகாவாட்‌ அனல்‌ மின்‌ நிலையத்திற்கு 12,000 டன்‌ நிலக்கரியும், 600 மெகாவாட்‌ அனல்‌ மின்‌ நிலையத்திற்கு 14 ஆயிரம்‌ டன்‌ நிலக்கரியும் நாளொன்றுக்கு தேவைப்படுகிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நிலக்கரி பற்றாகுறை காரணமாக, மேட்டூர்‌ அனல்‌ மின்‌ நிலையத்தில்‌ சுமார்‌ 7 ஆயிரம்‌ டன்‌ அளவுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது. 

இதனால்‌ முதல் பிரிவில் உள்ள 840 மெகாவாட்‌ அனல்‌ மின்‌ நிலையத்தில்‌ 2,3,4 ஆகிய 3 அலகுகளில்‌ மின்‌ உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மூன்று அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளதால், மின் பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: மின்வெட்டு புகார் கூறிய இ.பி.எஸ்; நேரில் அழைத்துச் சென்று விளக்குகிறேன் என செந்தில் பாலாஜி பதில்

இந்த உற்பத்தி நிறுத்தத்திற்கு காரணமாக, நாளொன்றுக்கு மத்திய நிலக்கரி தொகுப்பில் இருந்து வர வேண்டிய சுமார் 12,000 டன் நிலக்கரி வரவில்லை என்று அனல்மின் நிலைய தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.