நெல்லையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த விவகாரம்.. உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்ட்.!

நெல்லையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளக்கால் பொதுக்குடி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிந்து வந்த செல்வசூர்யா என்ற மாணவருக்கும், 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் சமுதாயக் கயிறு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனை மோதலாக மாறியது.

இருவருக்கும் ஆதரவாக அவரவர் நண்பர்கள் ஒன்று கூடி, கற்களை வீசி தாக்கிக் கொண்டதில், பலத்த காயமடைந்த மாணவர் செல்வசூர்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவ நேரத்தில் பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உடற்கல்வி ஆசிரியர்கள் ஷீபா பாக்கியமேரி, தமிழ்செல்வன் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு பொறுப்பு தலைமை ஆசிரியருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.