சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும்.
அத்தகைய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் எத்தனை குதிரைகள் இருக்கின்றன என்பதை கண்டுபிடியுங்கள் என்கிற சவாலை இணையவாசிகள் முன்வைக்கின்றனர்.
நீங்கள் எத்தனை குதிரைகளை பார்க்கிறீர்கள்? மூன்று? ஐந்து ? ஏழு?
இந்த படத்தை தேசிய சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நெட்டிசன்கள் குழப்பமடைய வைத்த இப்படத்திற்காக விடையையும் பகிர்ந்துள்ளனர். ஆமாம், அந்த படத்தில் மொத்தம் ஏழு குதிரைகள் இருக்கின்றன. குதிரையின் பின் மற்றும் முன் பகுதிகள் போன்றவறை படத்தில் மறைமுகமாக காட்சியளிப்பதாக சொல்லப்படுகிறது.
உடனே படத்தில் செக் செய்திருப்பீர்கள். இப்பவும் கண்டுப்பிடிக்கவில்லையெனில், கவலையை விடுங்கள். பதிலை கீழே காணலாம்
- இடது புறத்தில் ஒரு குதிரை பார்க்கிறது.
- நடுவில் நான்கு குதிரைகளின் முகங்கள் ஒன்றாக இருக்கின்றன. அந்த குதிரைகள் குழுவில் இடமிருந்து இரண்டாவது இருக்கும் குதிரையின் பிரவுன் மூக்கு பகுதி, கீழே குனிந்திருக்கும் குதிரையின் முகத்தின் வலது பக்கத்தை மறைக்கிறது.
- வலதுபுறம் ஒரு சிறிய குதிரை பக்கவாட்டாக நிற்கிறது. அதற்கு மேலே ஏழாவது குதிரையின் பின்புறம் உள்ளது.
இந்தப் படத்தை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பு சேலஞ்ச் செய்யுங்கள்.