புதுடெல்லி: பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகர், முக்கியஅரசியல்வாதிகளுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்துள்ளார். இது தொடர்பான புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சந்திரசேகருடன் தொடர்பில் இருப்பதாக பாலிவுட்நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதையடுத்து ஜாக்குலினை கைது செய்து அமலாக்கத் துறையினர், விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சில பரிசு பொருட்கள் மற்றும் வங்கி டெபாசிட் உட்பட ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சொந்தமான ரூ.7 கோடிமதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜியோமியின் ரூ.5,551 கோடி..
சீனாவைச் சேர்ந்த ஜியோமி குழுமத்தின் ஒரு அங்கமான ஜியோமி டெக்னாலஜி இந்தியாபெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படு கிறது. இந்நிறுவனம் ரூ.5,551.27கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை 3 வெளிநாட்டுநிறுவனங்களுக்கு சட்டவிரோத மாக அனுப்பியதாக கடந்த பிப்ரவரி மாதம் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஜியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடியை பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத் துறை நேற்று தெரிவித்தது.